The GOAT திரைவிமர்சனம் Disaster ஆ? Worth Watch ஆ? உண்மை என்ன?
அந்த பக்கம் இந்த பக்கம்னு யாரு பக்கமும் சாயாம, நேர்மையா உள்ளத உள்ளபடி சொல்லுற ஒரு விமர்சனத்த உங்களுக்கு தரணும்னு நினச்சேன். அதுதான் இது!
The GOAT Review in Tamil
தி கோட் திரைப்படம் டிஸாஸ்டர் என ஒரு குரூப்பும், நல்லா இருக்கு சூப்பரான படம் என ஒரு குரூப்பும் மாறி மாறி கம்பு சுத்தி வருவதால், படம் உண்மையிலேயே எப்படி இருக்கிறது என்பதை பொதுமக்களாகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருப்பீர்கள். உண்மைதானே? சரி வாங்க தி கோட் படம் எப்படி இருக்கு, படம் தியேட்டர்ல போயி பாக்கலாமா ஓடிடில வர்ற வரைக்கும் வெயிட் பண்ணலாமா? படத்துல என்னலாம் இருக்கு மாஸ் மொமண்ட்ஸ், என்ஜாயபுள் ஷாட்ஸ்னு நீங்க விஜய் ரசிகராவோ வெங்கட் பிரபு மேக்கிங் புடிச்சி அவரோட ரசிகராவோ இருந்தா நிச்சயம் இந்த படத்த தியேட்டர்ல பாப்பீங்க.
ஒருவேள டவுட்டா இருந்தா டவுட்டே வேணாம் கண்டிப்பா தியேட்டர்ல போயி பாருங்க. மத்தபடி நா யாருக்கும் ஃபேன்லாம் இல்ல ப்ரோ. படத்துல எது எது எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க அத வச்சி போகலாமா வேணாமான்னு நானே முடிவு பண்ணிக்குறேன்னு இருந்தீங்கன்னா வாங்க நாம படத்த பத்தி முழுசா அலசலாம். The GOAT Review in Tamil
கதை | The GOAT Story
விஜய் படத்தை பொறுத்தவரையில் கதைக்கு அதிக மெனக்கெடல் தேவையில்லை. அதில் லாஜிக் எல்லாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை. அவரின் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் ரெடி செய்து தயாராக வைத்திருப்பார். அதனால் கதையை வைத்து நீங்கள் படத்தை ஜட்ஜ் செய்யத் தேவையில்லை.
அதேநேரம் கதை வழக்கமான ஒன்றுதான். இந்தியாவை அழிக்க நினைக்கும் வெளிநாட்டு சக்திகளை அழிக்க இந்தியாவின் ஸ்பெஷல் உளவுத்துறை அதிரடியாக களமிறங்கியுள்ளது. இவர்களது குழுவில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம் ஆகியோர் இருக்கிறார்கள். குழு என்று ஒன்று இருந்தால் அதற்கு தலைவன் ஒருவன் இருப்பான்தானே. அவர்தான் நம்ம தளபதி.
தாய்லாந்துக்கு போன இடத்துல விஜய்க்கும் அவரது மனைவியான சிநேகாவுக்கும் இடையில ஏற்படுற பிரச்னையால, பிரிஞ்சிடுறாங்க. அதுக்கு அப்றம் அப்படியே காலம் உருண்டோட அதுவர சாதாரணமா இமிகிரேசன் துறையில் சாவகாசமாக வேலை செய்துட்டு இருக்குற நம்ம ஹீரோ, திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சா ஆர்டர்னு வழக்கமான படங்கள போலவே, மாஸ்கோவுல ஒரு பிரச்னை.
வேற வழியே இல்ல ஹீரோதான் அந்த வேலைய செஞ்சாகணும்னு களமிறங்க, அங்க வருது ஒரு டுவிஸ்ட்டு.. அந்த இடத்துல படம் சூடுபிடிக்க ஆரம்பிக்க அதுவரைக்கும் கரி வண்டி ஸ்பீட்ல போன படம், அடுத்து வந்தேபாரத் வேகத்துல பறக்க ஆரம்பிக்குது. ரன்னிங்கு சேசிங்கு ஃபைட்டிங்குனு தளபதிய மாஸா காமிச்சிருக்காங்க. அப்றம் கிளைமாக்ஸ் வந்துடுது.
The GOAT Review in Tamil
இப்படித்தாங்க கதை இருக்கு. ஏன்னா லைட்டா கதைய சொல்லிட்டாலும் அப்றம் எந்த சுவாரஸ்யமும் இருக்காது உங்களுக்கு. தியேட்டர்ல போயி பாக்கணுமா வேணாமா?
இயக்கம் | The GOAT Director
ஏன்ணே.. ஏன்..! கதை நல்லாத்தானே இருக்கு. திரைக்கதையும் சுவாரஸ்யமாதான போகுது. ஆனா ஏன் சொதப்பலா தெரியுது. ஏற்கனவே பாத்த பல படங்களோட சீன்கள்லாம் உள்ள வந்து போறப்ப அத எப்படின்ணே நாங்க டிவிஸ்ட்னு நம்ப முடியும். சரி அத டிவிஸ்ட்னே ஒத்துக்குறோம். ஆனா மங்காத்தா நினைப்புலயே ஒரு விசயத்த பண்ணிருக்கீங்க பாருங்க.. ஏதோ.. படம் நல்லா வந்துடிச்சி. வேகமா போறதால அந்த பிரச்னை பெருசா தெரியல. யாராச்சும் என்னனு கண்டுபிடிச்சீங்கன்னா கமெண்ட்ல சொல்லுங்க பாப்போம்.
தளபதி விஜய் | Thalapathy is the GOAT
இவரைப் பற்றி நான் என்ன சொல்ல. ஊரே சொல்கிறதே. நடிப்புல டபுள் விசில், ஆக்ஷன், டான்ஸ்னு வந்துட்டா டிரிபிள் விசில், அட மொத்த படத்துக்கும் தியேட்டர்ல விசில் கிழியுது. நீங்க விஜய் படங்கள பாத்து ரசிப்பீங்கன்னா நான் சொன்ன எதையும் கண்டுக்காம படத்த பாத்து என்ஜாய் பண்ணுங்க. லாஜிக் மிஸ்டேக்லாம் எதையும் பாக்காதீங்க.
ஃபைட்டுலயும் சரி, பாட்டுலயும் சரி அட அட அட.. கியூட் தளபதி, ரக்கட் பாய் தளபதி, சாக்லேட் லுக் தளபதினு இப்பவும் பொண்ணுங்க விழுவாங்க.. பசங்களுக்கே பொறாமை பொங்கும் அவ்வளவு அழகு.
முக்கியமான விசயம் படத்துல எஸ் ஜே சூர்யா இல்ல. அப்பாடா தாம்பரம் போகாதாம்பானு சொல்றமாதிரி எந்த படத்த பாத்தாலும் அது எஸ் ஜே சூர்யா இருக்கார்யா.
The GOAT Review in Tamil
இசை | The GOAT Yuvan
அந்த லெவலுக்கு இல்ல. இதுவே மங்காத்தா டைம்ல இந்த படத்த நீங்க விட்ருக்கணும் யுவன் போட்ட பிஜிஎம் அப்போலாம் அப்படி இருந்துது. இப்ப சோடை போயிட்டாரு போல. அவருக்கு பதிலா அனிருத்த போட்ருக்கலாம்னு யோசிச்சா, சே....னா...பதி... தாத்...தா பிஜிஎம் வேற லெப்ட் காதுல பாயுது.
கேமரா + படத்தொகுப்பு | The GOAT Photos
நைஸ் கய்ஸ்..
மற்றவர்கள் நடிப்பு | The GOAT Cast
சிநேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம் அவங்க வேலைய சரியா செஞ்சிட்டு போறாங்க. ஹீரோயின்தான்.. சரி விடுங்க விஜய் பட ஹீரோயின்ஸுக்கு அவ்ளோதான் குடுப்பாங்க.
கமல்ஹாசன் | Cameo Appearence
அட.. கமல்ஹாசன் தயாரிப்பில் நடிச்சிட்டு இருக்குற சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் கூட நடிச்சிட்ருக்குற திரிஷா, அப்றமா கேப்டன் விஜயகாந்த் மூனு பேரும் கேமியோ பண்ணிருக்காங்க. அதுலயம் கேப்டன்... தியேட்டர்ல பாக்க வேண்டிய மொமண்ட் அது.
ரிசல்ட் | The GOAT Rating
8.5 / 10
நிச்சயமா வெற்றி! கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க. இல்லைனா வருத்துப்படுவீங்க!