GOAT ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் விஜய்! இப்பவே இத்தனை கோடியா?
GOAT ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் விஜய்! இப்பவே இத்தனை கோடியா?
GOAT ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் விஜய்! இப்பவே இத்தனை கோடியா? | The GOAT Pre Booking Box Office
தளபதி படைக்கும் GOAT பாக்ஸ் ஆபிஸ் சாதனை!
தளபதி விஜய் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு கொண்டாட்டம் தான். அந்த கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களில் உலகமே கொண்டாட போகிறது. ஆம், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'GOAT' திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு உதாரணமாக இப்படத்தின் முன்பதிவு தற்போது உலகம் முழுவதும் தொடங்கி விட்டது.
பிரமாண்ட பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி, மோகன், ஜெயராம் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 'GOAT' திரைப்படம் உலகளவில் முன்பதிவில் இதுவரை ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், இப்படம் வெளியாவதற்கு முன்பே பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு நம்முடைய சினிஉலகம் Youtube சேனலுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியை காண தவறாதீர்கள்.