பழைய யுவனைக் கேட்ட இயக்குநர்… எடுத்துக்கொடுத்து எகிற வைத்த யுவன் சங்கர் ராஜா..!

'லவ் டுடே' படத்துக்காக அப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் வெளியிட்டுள்ள பாடல் உருவாக்கத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.;

Update: 2022-08-01 08:55 GMT

அண்மைக் காலமாகவே, Making Video என்று படம் அல்லது பாடல் உருவான நிகழ்வை பட வெளியீட்டுக்கு முன்போ, பின்போ படக்குழுவினர் வெளியிடுவது வழக்கம். அவ்வாறான வீடியோக்கள் பெரிய வரவேற்பைப் பெற்று வைரலாவதும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், நெல்சன், அனிருத் ஆகியோர்தான் தங்களது பட பாடல் உருவாக்கத்தை, அதில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்வை வீடியோவாக வெளியிடுவது வழக்கம்.

அதேபோல இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், தான் இயக்கும் 'லவ் டுடே' படத்துக்காக யுவன் சங்கர் ராஜாவிடம் பழைய யுவன் வேண்டும் சார் என கேட்க, அதற்கு யுவன் சங்கர் ராஜா தனது வீட்டு பெட்டியில் இருந்து பல வருடங்களுக்கு முன், தான் இசையமைத்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொடுக்கிறார். பிரதீப் ரங்கநாதன் அதிர்ந்து போய், "இது ரொம்ப பழைய யுவனாக இருக்கிறதே" என்று அசடு வழிவதாக உள்ள அந்த வீடியோ தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு ஆகியோர் நடித்த 'கோமாளி' படத்தை இயக்கிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு தற்போது 'லவ் டுடே' என்கிற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் நாயகனும் அவரே. இந்தப் படத்தின், சாச்சிட்டாளே... என்கிற புரோமோ பாடல் வெளியாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப் படத்துக்காகத்தான் இயக்குநர் வெளியிட்டுள்ள அந்தப் பாடல் உருவாக்க வீடியோ வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News