வடிவேலுவுடன் வந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு ஒமிக்ரான்

வடிவேலுவுடன் வந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு ஒமிக்ரான் ஆரம்ப அறிகுறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-12-25 12:46 GMT

வடிவேலுவுடன் வந்த இயக்குநர் சிராஜ், தயாரிப்பாளர்களில் ஒருவரான தமிழ் குமரன்.

பிரபல காமெடி நடிகர் வடிவேலு லண்டன் சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் சென்னைக்கு திரும்பினார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட  கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடிவேலுக்கு  ஒமிக்ரான் வகை தொற்று என்றும்,  ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் கவலைப்படத்தேவையில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், வடிவேலுவுடன் வந்த இயக்குநர் சிராஜ், தயாரிப்பாளர்களில் ஒருவரான தமிழ் குமரனுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், இருவருக்கும் எஸ்ஜின் டிராப் உள்ளது. சிராஜுக்கு நெகட்டிவ் வந்துள்ளது. அவருக்கு சளி இருப்பதாக சொன்ன நிலையில் மீண்டும் திருவள்ளூர் டிடியிடம் சொல்லி பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 3 பேரும் நன்றாக உள்ளனர் என்றார்.

Tags:    

Similar News