விரைவில் தனிஒருவன் 2: அப்டேட் கொடுத்த ஜெயம் ரவி
பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னரே தனிஒருவன் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டதாக ஜெயம் ரவி தெரிவித்தார்.;
மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'தனி ஒருவன்'. இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கேட்டு வந்தனர். இந்நிலையில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஜெயம் ரவி பேசியுள்ளார். அதில், தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராகிவிட்டதாகவும் பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னரே தனிஒருவன் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தானும், சகோதரர் ராஜாவும் அவரவர் பணியில் கவனம் செலுத்தி வருவதால், பணிகள் முடிந்த பிறகு இருவரும் தனிஒருவன் படத்தில் இணைவோம் என ஜெயம்ரவி கூறியுள்ளார்.