தங்கலான் படத்தின் தமிழக உரிமை மட்டும் இத்தனை கோடியா?
தங்கலான் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை எழுந்துள்ளதால் இந்த படத்தை பெரிய தொகைக்கு வியாபாரம் செய்துள்ளது படக்குழு.;
தங்கலான் படத்தின் தமிழக உரிமை மட்டும் இத்தனை கோடியா? | Thangalaan Tamil Nadu Theatrical Rights
தங்கலான் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை மிகப்பெரிய தொகைக்கு விலை போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்துக்கு நல்ல பாடல்களையும் கொடுத்து பின்னணி இசை அமைத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்குமார்.
பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்ட்டகிரோன் நடித்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.
ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்துக்கு இப்போதே பாசிடிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. படத்தை பார்த்தவர்களிடமிருந்து நல்ல ரிப்போர்ட் கிடைத்து வருகிறது. இந்த படத்தின் திரையரங்கு உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது.
விக்ரம் படங்களிலேயே மிக அதிகமான தொகைக்கு இந்த வியாபாரம் நடைபெற்றிருக்கிறது. தங்கலான் திரைப்படம் 25 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. இதற்கு முன்னதாக வெளியான கோப்ரா திரைப்படம் 17கோடி ரூபாய்க்குதான் விலை போயிருந்தது.
இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை எழுந்துள்ளதால் இந்த படத்தை 25 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளது படக்குழு. விநியோகஸ்தர்கள் இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.