மதுரையில் தங்கலான்.. அத்தோட முடியுது படப்பிடிப்பு!
பா ரஞ்சித் தலைமையில் மதுரையில் 10 நாட்கள் கடைசி கட்ட படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. அத்துடன் தங்கலான் படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைந்து பூசணிக்காய் உடைப்பார்கள் என்று கூறப்படுகிறது.;
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்தை கே இ ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இந்த படத்திலிருந்து முக்கியமான அப்டேட் தெரியவந்துள்ளது. ஷூட்டிங் குறித்த அப்டேட்தான் அது.
பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க வயலில் அடிமைகளாக உழைத்த மக்களின் வாழ்க்கை குறித்து எடுக்கப்பட்டு வரும் படமாகும். தங்கலான் படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். விக்ரம் ஜோடியாக பார்வதி, மாளவிகா மோகனன் இருவரும் நடிக்கிறார்கள். இவர்கள் படத்துக்காக சில தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
சார்பாட்டா பரம்பரை படத்துக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் இந்த படம் எளியவர்களின் வலியையும் ஆதிக்க வாதிகளின் கொடூரத்தையும் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் கே ஜி எஃப் என்று அழைக்கப்படும் கோலார் தங்க வயல் பகுதி உள்ளிட்ட தென்னிந்தியாவின் சில பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். விக்ரம் படம், பா ரஞ்சித் இயக்கம் என்பதால் இந்த படத்துக்கு மிகப் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
தங்கலான் படப்பிடிப்பு கடந்த ஆண்டே துவங்கி நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 80 சதவிகித படப்பிடிப்பு கடந்த மாதமே முடிந்துவிட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டியது பாக்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோசன் பணிகளுக்காக விக்ரம் இப்போது விடுப்பில் இருக்கிறார். அவர் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, மணிரத்னம், ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோருடன் இந்தியா முழுக்க பறந்து படத்துக்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.
வரும் மே மாதம் 2ம் தேதி சென்னை ஈவிபியில் இந்த படப்பிடிப்புத் துவங்கும் என்றும் அடுத்த 15 நாட்களுக்கு அதாவது மே 17ம் தேதி வரை இந்த ஷெட்யூல் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு மதுரைக்கும் பயணப்படுகிறது இந்த டீம்.
பா ரஞ்சித் தலைமையில் மதுரையில் 10 நாட்கள் கடைசி கட்ட படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. அத்துடன் தங்கலான் படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைந்து பூசணிக்காய் உடைப்பார்கள் என்று கூறப்படுகிறது.
தங்கலான் படத்தை 2024 பொங்கல் தினத்தில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.