அப்பாவைச் சந்தித்த விஜய்! ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடிகர் விஜய் தனது அப்பா எஸ்ஏ சந்திரசேகரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்;
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக பேசாமல் இருப்பதாக சமீப காலமாக செய்திகளில் அடிபட்டார். ஆனால், விஜய் தனது அப்பாவை நேரில் சந்தித்து, தங்களுக்குள் எந்தவிதமான சண்டையும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ஏஜிஎஸ் தயாரிப்பில் தனது 68வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கும் விஜய், சில தொழில்நுட்ப காரணங்களுக்காக அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வஜய், நேற்று சென்னை திரும்பினார்.
விஜய் சென்னை திரும்பியுள்ள நிலையில், அவரது வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. வீடு வந்ததும், உடல் நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த தனது அப்பாவை நேரில் சந்தித்தார்.
விஜய் தனது அப்பாவை சந்தித்ததையொட்டி, இருவரின் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், விஜய்-எஸ்.ஏ.சந்திரசேகர் சண்டை முடிவுக்கு வந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
விஜய் தனது அப்பாவை சந்தித்தது, அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. விஜய்-எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் இணைந்து சினிமா உலகில் சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
விஜய் தனது அப்பாவிடம் சண்டை போட்டதால்தான், தனது அம்மா ஷோபாவை மட்டும் சந்தித்து வந்தார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது அப்பாவை சந்தித்தது, அவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
அதேநேரம் புகைப்படத்தில் விஜய், சந்திரசேகர் இருவரது முகமும் இறுக்கமாக இருப்பதை ரசிகர்கள் கவனிக்காமல் இல்லை. இதற்கு காரணம் அவர்களுக்குள் இன்னமும் சண்டை இருக்கிறது. அம்மா சொல்லியே அப்பாவை சந்தித்திருக்கிறார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். அப்பாவோடு மட்டுமின்றி தனது மகனையும் அவர் இன்னமும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.
விஜய் தனது மகன் சஞ்சய்யை சந்தித்தாரா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இயக்குநராக அறிமுகமாகவுள்ள சஞ்சய்க்கு, விஜய் இன்னும் வாழ்த்து சொல்லவில்லை என்று சொல்லப்படுகிறது. விஜய் விரைவில் சஞ்சய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தால், ரசிகர்களுக்கு அது இன்னும் மகிழ்ச்சியை அளிக்கும்.