Thalapathy 69 தான் தீரன் அதிகாரம் 2 ஆ? இப்படியும் ஒரு சேதி!
தளபதி 69 படம் தான் தீரன் அதிகாரம் 2 படம் என தகவல் வெளியாகியுள்ளது.;
கார்த்தி நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்ட தீரன் அதிகாரம் 1 படத்தின் அடுத்த பாகம்தான்தான் தளபதி விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் அடுத்த படம் என்று தகவல் பரவி வருகிறது. இதன் பின்னணி என்ன? உண்மை என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம். Thalapathy 69 Story in Tamil
1990களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் ஆந்திர, கர்நாடக, தமிழக பகுதிகளில் நடைபெற்ற பவாரியாஸ் கொள்ளை கும்பலைப் பிடிக்க தமிழ்நாடு போலீஸ் எந்த அளவுக்கு போராடியது என்பது குறித்து மிக தெளிவான திரைக்கதையில், விறுவிறுப்பான காட்சிகளுடன் நமக்கு எடுத்து தந்திருப்பார் ஹெச் வினோத்.
Thalapathy Vijay Is Back As Cop After 8 Long Years(Theri) , A Pakka Commercial Entertainer… One last Dance ❤️🔥 #Thalapathy69 pic.twitter.com/BiPmBSy85L
— Udhay Annamalai (@UDoffl) September 9, 2024
அதுவரை காவல்துறை மாஸாக கிளாஸாக பல படங்களில் பார்த்த நமக்கு, உண்மையில் காவல்துறையினர் எப்படி ஒரு குற்றவாளியைத் தேடிச் செல்கிறார்கள். அப்படி செல்லும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் சவால்கள் என அனைத்தையும் காட்டியிருப்பார். மிகப்பெரிய அளவிலான வெற்றியைப் பெற்ற இந்த படத்தின் அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் எனவும் கார்த்தியே அந்த படத்தின் நாயகனாக நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதிகாரம் முதல் பாகத்திலேயே கார்த்திக்கு வயசாகிவிடும் என்று காட்டியிருப்பார்கள். இதனால் கதை எப்படி துவங்கும் நகரும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். Thalapathy 69 Story in Tamil
இதற்கிடையில்தான் ஹெச் வினோத் தளபதி விஜய்யுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. தி கோட் படத்தில் நடித்துக் கொண்டிருந்த தளபதி விஜய் தரப்பிலும் சரி, தயாரிப்பு தரப்பிலும் சரி அதுகுறித்து மூச்சு விடாமல் இருந்த நிலையில், ஹெச் வினோத்திடம் எப்படியோ பேசி கறந்துவிட்டனர். அதேநேரம் இப்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இருந்தபோதிலும் தளபதி 69 படத்தில் விஜய் போலீஸாக நடிக்க இருப்பதாகவும், அவர் ஒரு முக்கியமான கேஸைத் தேடி இந்தியா முழுக்க செல்வார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. பட தயாரிப்பு நிறுவனமே இந்த படம் குறித்து அறிவிப்பு எதுவும் விடாத நிலையில், இந்த தகவல்கள் எங்கிருந்து கசிந்தன இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்தால் அந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்பது நம்பிக்கை. போக்கிரி, தெறி வரிசையில் இந்த படமும் நிற்கும் என்கிறார்கள்.
அதுமட்டுமின்றி ஹெச் வினோத் போலிஸ் படம் எடுத்தால் அது தீரன் மாதிரி வெற்றி பெற வேண்டும் என்றும் வலிமை மாதிரி தோற்றுவிடக் கூடாது என்றும் விஜய் ரசிகர்கள் வேண்டிக்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது அவர்களே வடிவமைத்து விஜய்யின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் ஸ்டைலாக அமர்ந்திருக்க அவரைச் சுற்றி துப்பாக்கிகளை நீட்டி மூவர் நிற்கிறார்கள். Thalapathy 69 Story in Tamil
இதையெல்லாம் வைத்துதான் இந்த படம் தீரன் அதிகாரம் 1 படத்தின் அடுத்த பாகம் தீரன் அதிகாரம் 2 என சிலர் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் இந்த படத்தைக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே எல்லாம் உறுதியாகும் அதுவரை இவை அனைத்தும் சினிமா கிசுகிசுக்கள் மட்டுமே.