தளபதி 69 - இயக்கப்போவது யார்? புது இயக்குநர்..!

தளபதி விஜயிடம் தனித்தனியாக இருவரும் சில ஒன்-லைன் கதைகளை கூறியதாகவும், அவற்றில் விஜய் ஈர்ப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, இருவரிடமும் முழுக்கதையை விரிவாக கூறுமாறு விஜய் கேட்டுக் கொண்டாராம். அதன்படி இருவரும் தற்போது திரைக்கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2024-02-29 04:30 GMT

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப்போவது வெற்றிமாறனும் இல்லை ஷங்கரும் இல்லை. யாரென்று தெரிந்தால் ஷாக் ஆவீர்கள். இவர் காமெடியனாக இருந்து ஹீரோவாகி இயக்குநரானவர். அட நம்ம ஆர் ஜே பாலாஜி தாங்க. இவரு எப்படி வாங்க முழுசா தெரிஞ்சிப்போம்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதில் ஆர்.ஜே.பாலாஜியும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும்தான் முன்னணியில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'தி கோட்' படத்தை அடுத்து, விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தளபதி விஜய் உச்ச நடிகராக இருக்கும் இந்த சமயத்தில் சினிமாவிலிருந்து விடைபெற்று அரசியலில் கால்பதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் ரசிகர்கள் அரசியலில் இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அதே நேரம் தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் புதிய படமான தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தி கோட் படத்தில் விஜய்க்கு நிகரான பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அனைவருக்கும் பவர்ஃபுல்லான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சிநேகா, மீனாட்சி ஆகியோரும் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாகவே தகவல்கள் வருகின்றன. கடைசி கட்ட ஷெட்யூலில் திரைப்பட படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் அரசல் புரசலாக வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்கிற தகவல்களை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதில் முதன்முதலாக பேசப்பட்டது கார்த்திக் சுப்பராஜ்தான். அடுத்து வெற்றிமாறன், அட்லீ, ஷங்கர் என ஒரு ரவுண்டு வந்து தெலுங்கில் கோபிசந்த் மலினேனி வரை சென்று இப்போது ஆர் ஜே பாலாஜியில் வந்து நிற்கிறது. ஆர் ஜே பாலாஜியும், கார்த்திக் சுப்பராஜும்தான் முன்னிலையில் இருக்கிறார்களாம்.

தளபதி விஜயிடம் தனித்தனியாக இருவரும் சில ஒன்-லைன் கதைகளை கூறியதாகவும், அவற்றில் விஜய் ஈர்ப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, இருவரிடமும் முழுக்கதையை விரிவாக கூறுமாறு விஜய் கேட்டுக் கொண்டாராம். அதன்படி இருவரும் தற்போது திரைக்கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதி திரைக்கதை நிறைவடைந்ததும் விஜயிடம் அதைக் கூறி அவரது ஒப்புதல் பெற இருவரும் காத்திருக்கின்றனர்.

புதுமையான கூட்டணிகளாக இருக்கும்

இருவருடனும் இணைவதும் விஜய்க்கு புதுமையான அனுபவமாகவே அமையும். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் புதுமையான கதைகளுக்கும் வித்தியாசமான காட்சியமைப்புகளுக்கும் பெயர்போனவர். 'பேட்ட', 'ஜிகர்தண்டா' போன்ற வெற்றிப் படங்களை அவர் இயக்கியுள்ளார்.

மறுபுறம் ஆர்.ஜே.பாலாஜி, நகைச்சுவையில் கைதேர்ந்தவர். தற்போது இயக்குநராகவும் கால் பதித்துள்ளார். ஹீரோவாக 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நடித்த அவர், தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்கி முடித்துள்ளார். அவ்விரு படங்களிலும் அவரது நகைச்சுவைத் திறன் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

யாருடைய இயக்கத்தில் நடிப்பார் தளபதி?

ஆர்.ஜே.பாலாஜியா, கார்த்திக் சுப்புராஜா எனப் பிரபல இயக்குநர்கள் இருவர் பெயரும் அடிபடுவதால், யாருடைய இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. பாலாஜியின் நகைச்சுவை நிறைந்த கதையா அல்லது கார்த்திக் சுப்புராஜின் விறுவிறுப்பான ஆக்‌ஷன் கதையா என்பது விரைவில் தெரியவரும். ஒன்று மட்டும் நிச்சயம் - தளபதி 69 ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும்!

Tags:    

Similar News