விஜய்க்கு கதை சொல்லும் இயக்குநர்! இவரு அவரு ஃபேன்பாய்ல?
தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க கதை கேட்கும் படலத்தைத் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.;
விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபுவைத் தொடர்ந்து அவர் யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது இப்போதே பேசத் தொடங்கியுள்ள நிலையில், அவர் அடுத்ததாக ரஜினிகாந்த் ரசிகரின் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
விஜய்க்கு 3 வெற்றிப்படங்கள் கொடுத்த அட்லீயே ரஜினிகாந்த் ரசிகர்தான். இவ்வளவு ஏன் விஜய்யே ரஜினிகாந்த் ரசிகர்தான். இந்நிலையில் இப்போது விஜய் கதை கேட்க இருக்கும் இயக்குநரும் ரஜினியின் ஃபேன்பாய்தான். அவர் ரஜினிகாந்தை வைத்து சூப்பர்ஹிட் படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை. நம்ம கார்த்திக் சுப்புராஜ்தான். வெங்கட் பிரபு படத்துக்கு பிறகு அநேகமாக அட்லியுடன் விஜய் இணைவார் என்று கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து புதிய படத்தில் நடிக்கத்தான் புதிய இயக்குநரைத் தேடுவதாக கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்பராஜ் ஏற்கனவே விஜய்க்கு கதை சொல்லியிருக்கிறார். ஆனால் அப்போதைக்கு இந்த கூட்டணி உறுதியாகவில்லை. இந்நிலையில் மீண்டும் விஜய், கார்த்திக்கிடம் கதை கேட்க சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தளபதி விஜய் இருவரும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை கார்த்திக் சொல்லும் ஒன்லைன் நிச்சயமாக விஜய்க்கு பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
லியோ படத்தில் இதுவரை காணாத விஜய்யை பார்க்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விஜய் தன்னுடைய சேபர் சோனிலிருந்து வெளியேறி வந்துவிட்டார். அந்த வகையில் இனி கார்த்திக் சுப்பராஜின் வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று தெரிகிறது.