Thalapathy 68 Update 6 பாட்டாம் 6 ஃபைட்டாம்.. படம் முழுக்க பிரபலங்களாம்..!

தளபதி 68 படத்தில் 6 சண்டைக் காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-10-12 16:40 GMT

தளபதி 68 படத்தில் தளபதி விஜய்யுடன் டாப் ஸ்டார் பிரசாந்த், மாஸ்டர் பிரபுதேவா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களுக்கும் சேர்த்து மொத்தம் 6 ஃபைட் இருக்கிறதாம். மேலும் ஆளுக்கு ஒரு பாடலும் இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68 திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் 3ம் தேதி துவங்கி, அடுத்த 6 மாத காலம் நடைபெறும் எனவும் அதிலிருந்து இரண்டு மாதங்களில் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. Thalapathy 68 Release Date அநேகமாக படம் கோடை விடுமுறை விருந்தாக வெளியாகும் என்று தெரிகிறது. ஏப்ரல் 12 அல்லது 19 ம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்வது என முடிவில் இருக்கிறார்களாம்.

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்துக்கு தளபதி 68 என்று தற்காலிக பெயர் வைத்துள்ளனர். விஜய் ஜோடியாக இளம் ஹீரோயின் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்போது Thalapathy 68 Sneha ஜோதிகா படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிநேகா, அப்பா விஜய் ஜோடியாக நடிக்கிறார் எனவும், 24 வயது மகன் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார் எனவும் கூறப்பட்டு வருகின்றது.

லியோ ரிலீசுக்கு முன்னே ஷூட்டிங்

லோகேஷ் கனகராஜ், விஜய் இணைப்பில் உருவாகி வரும் லியோ பட வெளியீட்டுக்கு தமிழ் சினிமா ரசிகர்களே காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்தின் ரிலீசுக்கு முன்னரே விஜய், வெங்கட்பிரபு படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

மங்காத்தா படத்துக்கு பிறகு ஒரு பேட்டியில் அந்த படத்தில் விஜய்யும் அஜித்தும் நடிக்க வேண்டியது என்பது போல தெரிவித்திருந்தார் வெங்கட்பிரபு. அன்றிலிருந்து அவரும் தளபதி விஜய்யும் எப்போது இணைவார்கள் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாநாடு படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவுக்கு வேற லெவலுக்கு மார்க்கெட் எகிறிவிட்டது. தெலுங்கு திரையுலகமே அவரை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தது. இந்நிலையில்தான், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய் படத்தை இயக்க வெங்கட் பிரபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

சிநேகாவும் மீனாக்ஷியும்..!

வசீகரா படத்துக்கு பிறகு விஜய் ஜோடியாக Sneha in Thalapathy 68 சிநேகாவை நடிக்க வைக்க திட்டம் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகவும் வேறொரு தகவல் வெளியாகியிருந்தது. அதாவது மகன் விஜய்க்கு ஜோடி இவர் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது பிரியங்கா மோகனுக்கு பதிலாக மீனாக்ஷி சவுத்ரி நடிப்பார் என்று கூறப்படுகிறது. கிளாமரான வேடம் என்பதால் இந்த மாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

பிரசாந்துடன் பிரபுதேவா

தளபதி 68 படத்தில் இரண்டு முன்னணி நடிகர்களும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் பிரபுதேவா மற்றொருவர் டாப் ஸ்டார் பிரசாந்த். 90களில் விஜய், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா மூவரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நடிகர்களாக அறிமுகமாகினர். 1990ம் ஆண்டு பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமானார். 1992ம் ஆண்டு விஜய் நாளைய தீர்ப்பு படம் மூலம் அறிமுகமாகிறார். 1994ம் ஆண்டு பிரபுதேவா இந்து படத்தின் மூலம் அறிமுகமானார். அதே ஆண்டில் காதலன் படம் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார் பிரபுதேவா.

தளபதி 68 படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா மூவரும் சேர்ந்து வரும் வகையில் பாடல் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் இருக்கின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

டி ஏஜிங்

விஜய், பிரசாந்த், பிரபுதேவா மூவருக்குமே டி ஏஜிங் முறையில் அவர்களை 24 வயது காரர்களாக மாற்றும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக விஜய்யின் நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவா இருவரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களாம். அதிலும் இவர்கள் இருவருக்கும் தலா ஒரு பாடல், ஒரு சண்டை எனவும் படத்தில் இருக்கிறதாம். இதனால் இது ஒரு டிரிபிள் ஹீரோ சப்ஜெக்ட் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

Tags:    

Similar News