Thalapathy 68 heroine இவர்தானாம்! ஆனா..? VPன் சர்ப்ரைஸ்!

Thalapathy 68 heroine யார் என்பது பலரும் கேட்கும் கேள்வியாகி இருக்கிறது. படத்தில் ஜோதிகாவும் பிரியங்கா அருள் மோகனும் இருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2023-08-22 10:12 GMT

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக இளம் ஹீரோயின் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்போது Thalapathy 68 Jyothika ஜோதிகா படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜோதிகா, விஜய் ஜோடியாக நடிக்கிறாரா அல்லது இளம் நடிகைதான் ஹீரோயினா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களே லோகேஷ் கனகராஜ், விஜய் இணைப்பில் உருவாகி வரும் லியோ பட வெளியீட்டுக்கு காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய், வெங்கட்பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார்.

வெங்கட்பிரபுவும் தளபதி விஜய்யும் எப்போது இணைவார்கள் என கடந்த 10 ஆண்டுகளாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாநாடு படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவுக்கு வேற லெவலுக்கு மார்க்கெட் எகிறிவிட்டது. இதனால் விஜய்யுடன் இணையும் படம் இப்போதே பல லாப கணக்குகளைப் போட ஆரம்பித்துவிட்டது.

திருமலை படத்துக்கு பிறகு விஜய் ஜோடியாக Jyothika in Thalapathy 68 ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டம் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகவும் வேறொரு தகவல் வெளியாகியிருந்தது.

தளபதி 68 படத்தில் விஜய், ஜோதிகா, பிரியங்கா மோகன் என இன்னும் பல நட்சத்திரங்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் விஜய்க்கு எத்தனை கதாபாத்திரங்கள், விஜய்க்கு ஜோடி ஜோதிகாவா இல்லை பிரியங்காவா என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர். அதேநேரம் இதுகுறித்து அதிக விசயங்களை பேசக்கூடாது என முடிவெடுத்துள்ள தளபதி 68 படக்குழு முக்கியமாக இயக்குநர் வெங்கட் பிரபு வெளியில் வருவதையே நிறுத்திவிட்டாராம்.

லியோ படத்தில் விஜய்யின் 90ஸ் பேரான திரிஷாவை இணைய வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். படம் வெளியாகும் போது வேற லெவலுக்கு வெறித்தனமாக இருக்கும். இந்நிலையில், விஜய் ஜோடியாக குஷி, திருமலை படங்களில் நடித்த ஜோதிகாவை மீண்டும் விஜய்யுடன் திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

சூர்யாவுடனான காதல் திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்ட ஜோதிகா, பின்னர் கடந்த 2015ம் ஆண்டு 36 வயதினிலேயே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகன் வந்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது காதல் தி கோர் எனும் மலையாள படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்ரீ மற்றும் பிளாக் மேஜிக் எனும் ஹிந்தி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் தளபதி 68 படத்துக்கு பிறகு இவரது Thalapathy 68 Jyothika மார்க்கெட் மீண்டும் உயரும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News