தளபதி 68 சூப்பர் அப்டேட்! தயாரிப்பாளர் அவருதான் ஆனா இயக்குநர் வேற!

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Update: 2023-04-24 11:26 GMT

தளபதி 68 படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இயக்குநர் அவர் இல்லை வேறொருவர் என பேச்சு அடிபடுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனாலும் அட்லியும் இயக்கவில்லை என்பதால் கொஞ்சம் வருத்தமும் இருக்கிறது.

தளபதி 67 லியோ திரைப்படம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. 60 நாட்கள் படப்பிடிப்பு முடித்துக் கொண்டு காஷ்மீரிலிருந்து திரும்பி பின் சென்னையில் இன்னொரு 60 நாட்கள் படப்பிடிப்பை எடுத்துக் கொண்டிருக்கிறது லோகேஷ் கனகராஜ் டீம். இதனால் கூடிய விரைவில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. | leo shooting location


இந்த படத்தை வரும் ஆயுத பூஜை நாளை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து விஜய் தனது அடுத்த படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. அந்த படத்தை யார் தயாரிப்பார்கள் என்கிற பேச்சு இப்போதே அடிபடத் துவங்கிவிட்டது. | Leo movie update

சன் பிக்சர்ஸ், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் விஜய் கால்ஷீட்டை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலாக தெலுங்கில் மிகப் பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்காகவும் தளபதி விஜய் ஒரு படம் பண்ண உள்ளார் எனவும் தகவல் பரவியது. இதுதவிர தில் ராஜூ படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் விஜய். | Vijay 68 update


இந்நிலையில் முதலில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ், தில் ராஜூ படங்களில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. | Vijay super good films

முன்னதாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்க பிரபல தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்குவார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தளபதி 68 படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ்தான் தயாரிக்கிறது என்றாலும் இயக்குநர் கோபிசந்த் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். | vijay gopichand malineni


கோபிசந்த் படத்தில் விஜய் நடிக்கிறார் என தகவல் வெளிவந்த சமயத்தில் அய்யோ அவரா அவர் பயங்கரமான ஆளாச்சே அவர் மட்டும் வேண்டாம் தளபதி என ரசிகர்கள் விஜய்யிடம் சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்ததை காண முடிந்தது. இதனால் அவர் இல்லை என தெரிந்து கொஞ்சம் மகிழ்ச்சியடைந்துள்ளனர். | Vijay Atlee

தளபதி 68 கோபிசந்த் இல்லை எனத் தெரிந்ததும் அப்போ கண்டிப்பா அட்லீதான் என ரசிகர்களில் சிலர் பேசிவந்தனர். ஆனால் அட்லீயும் இந்த படத்தை இயக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனிடையே தளபதி விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

Tags:    

Similar News