Thalapathy 67 Leo போதை சாக்லேட் கதையா? இப்படி போச்சுன்னா வேற லெவல்!
தளபதி 67 லியோ படத்தின் கதையும் போதைப் பொருள் பற்றியதுதான் என லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த படமும் LCU விலேயே இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.;
தளபதி 67 லியோ படத்தின் கதையும் போதைப் பொருள் பற்றியதுதான் என லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த படமும் LCU விலேயே இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் நல்ல பெயரைப் பெற்றவர், விக்ரம் படத்தின் மூலம் உலக அளவில் தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார்.
தன்னை நம்பி யார் எந்த பொறுப்பை ஒப்படைத்தாலும் அதனை சரியாக செய்து காட்டும் தன்மை கொண்டவராக தன்னை முன்னிறுத்தி வருகிறார் லோகேஷ், தனது ஐகான், குரு, தயாரிப்பாளர் என மூன்றும் கமல்ஹாசனாக இருந்த விக்ரம் படத்தை செதுக்கியதிலிருந்து கமல்ஹாசனுக்கு அவர் மீது பெரிய நம்பிக்கை வந்துவிட்டது. ஏற்கனவே விஜய் இவரை நம்பி முழு நீள லோகேஷ் படத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். தொடங்கிவிட்டது லியோ. இந்த படத்தில் லோகேஷ் என்ன பேசப் போகிறார் என்பதை கோலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ள லோகேஷ், ஏற்கனவே இங்கு மிகப் பெரிய வசூல் சக்ரவர்த்தியாக நின்று கொண்டிருக்கும் விஜய்யை என்ன செய்யப்போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் பல ட்ரோல்களை சந்தித்துவிட்டு, வாரிசு படத்தை கொடுத்து அதிலும் சறுக்கியுள்ளார் விஜய். வசூல் ரீதியாக என்னதான் கோடியில் புரண்டாலும், நாள்கடைசியில் கண்டென்ட் தான் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும்.
கைதி படத்தின் ஒரு இணைப்பை விக்ரமில் பயன்படுத்தியவர், இவ்விரு படங்களிலிருந்தோ அல்லது ஏதோ ஒன்றையோ லியோ படத்தில் இணைக்க அதிக வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.
சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நாயகன் போதைப் பொருள் கடத்தும் கும்பலுக்கு எதிராக கூட செயல்படும் வகையில் கதை போகலாம் என்கிறார்கள். லியோ படத்தின் நடிகர்கள் பட்டியலும் மிகப் பெரியது. இதில் பல முன்னணி நாயகர்களும் இருக்கிறார்கள். இயக்குநர்களும் இருக்கிறார்கள் இவர் அனைவருக்கும் சரி சமமான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுத்து அவர்களின் கதாபாத்திரத்தையும் நடிப்பையும் சரியான முறையில் வெளிக்கொணர்வாரா லோகேஷ் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
போதைப் பொருட்கள் கடத்தி விற்பனை செய்து வரும் கேங்க் ஒன்று இளைஞர்களையும் தாண்டி சிறுவர் சிறுமியர்களை போதைக்கு ஆட்கொள்ள நினைக்கிறது. இதனை அறிந்த நாயகன் எப்படி முறியடிக்கிறார் என்பது போல இணையதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் சாக்லேட் செய்வது ஒரு விஜய், கத்தி செய்வது வேறொரு விஜய் இதில் இரண்டு விஜய் இருக்கிறார்கள் என்றும் சிலர் தங்களது டிகோடிங்கை வெளியிட்டு வருகிறார்கள்.