கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
விக்ரம் படத்துக்கு முன்னதாக கமல்ஹாசன் கதை எழுத, அந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் போதுமான நிதி ஆதாரம் கிடைக்காததால் அப்போதைக்கு அந்த படம் கைவிடப்பட்டது.
ரஜினிகாந்தை முதன்முறையாக இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். படத்தின் முதல் அப்டேட்டாக தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வடிவில் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜே தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனும் இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது மட்டும் உண்மையாக இருந்தால் திரை நிஜமாகவே தீப்பிடிக்கும்.
இறுதிக் கட்டத்தில் வேட்டையன்
தற்போது ரஜினிகாந்த் 'ஜெய் பீம்' புகழ் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுப்டி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. கன்னியாகுமரி, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமூக அக்கறையுடன் கதைக்களம் கொண்ட படம் எனவும், இதுவரை இல்லாத புதிய கெட்டப்பில் ரஜினி நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல் சி யூ..!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் ரஜினியின் 171-வது படம் என்பதால் 'தலைவர் 171' என்று குறிப்பிடப்படுகிறது. இந்தப் படத்தில் யார் யார் நடிக்க உள்ளனர் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் உறுதியாகவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பரிவ் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாக உள்ளனர். இதன் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது.
ஏப்ரல் 22ல் அப்டேட்..!
இதன் டைட்டில் டீசர் மற்றும் படத்தின் தலைப்பு எப்போது வெளியாகும் என்ற ஆவல் ரசிகர்களிடையே நிலவி வந்த நிலையில், ஏப்ரல் 22-ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி வெளியாகிறது என்ற தகவல், அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்பும் அப்போது வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஒரு பான் இந்தியா படமாக தலைவர் 171 உருவாகிறது என்ற தகவல்களும் உள்ளன. பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், லோகேஷ் கனகராஜ் இதை ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டைட்டில் இதுவா?
சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ள தகவலின்படி இந்த படத்துக்கு கோஸ்ட் என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் இந்த பெயர் அதிக அளவில் உபயோகிக்கப்பட்ட நிலையில், இந்த படமும் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸுடன் தொடர்புடைய கதையாக இருக்குமோ என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அதேநேரம் லியோ பட வெளியீட்டின்போது லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் இணையும் படம் எல்சியூவில் இல்லை என்ற தகவல் வெளியாகியிருந்தது.
டைட்டில் டீசர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படம் 'தலைவர் 171'. 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22-ம் தேதி வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் கதை..!
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனத்தில் எக்கச்சக்கமாக பவுண்டடு ஸ்க்ரிப்ட்ஸ் இருப்பதாகவும், அதனை ஒவ்வொன்றாக திரைப்படமாக உருவாக்க கமல்ஹாசன் முயற்சி செய்து வருவதாகவும் அவரது உதவியாளர் ராஜேஷ் எம் செல்வா முன்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படத்தின் ஒன்லைன் கதையும் கமல்ஹாசன் சொன்னதுதான் என இயக்குநர் லோகேஷ் கனகராஜே தெரிவித்துள்ளார். விக்ரம் படத்துக்கு முன்னதாக கமல்ஹாசன் கதை எழுத, அந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் போதுமான நிதி ஆதாரம் கிடைக்காததால் அப்போதைக்கு அந்த படம் கைவிடப்பட்டது. தற்போது இந்த கதையைத்தான் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
தீவிர கதை உருவாக்கத்தில் லோகேஷ்
தற்போது 'தலைவர் 171' படத்திற்கான கதை உருவாக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதனால் தற்காலிகமாக தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து பிரேக் எடுத்திருந்தார். பல நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். எனினும் இந்த அறிவிப்பு தேர்தல் விவாதங்களில் காணாமல் போய்விடும் வாய்ப்பு அதிகம்.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ், பிரபாஸுடன் ஒரு படம் இயக்க உள்ளதாகவும் வதந்திகள் உலவுகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. ரஜினிகாந்த் ரசிகர்கள் ஏப்ரல் 22ம் தேதியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். அன்றைய தினம் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி!