ரஜினி படம் வேண்டாம்... விலகிய கமல் ஃபேன்! யார் தெரியுமா?
ரஜினி படத்திலிருந்து விலகியிருக்கிறார் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான அந்த தெலுங்கு நடிகர்!;
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க இருக்கும் தலைவர் 170 படத்திலிருந்து விலகுவதாக முடிவெடுத்திருக்கிறாராம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரா இருக்கும் பிரபல நடிகர். த செ ஞானவேல் படத்தில் அவரும் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்படி தகவல் வந்துள்ளது. அவருக்கு பதிலாக இன்னொரு தெலுங்கு நடிகரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
நெல்சன் திலீப்குமார் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தைக் கொடுத்த நிலையில் அவருக்கு சரியான வெற்றியாக அமையாமல் போய்விட்டது. இதனால் அடுத்து கமிட் ஆகியிருந்த ரஜினி படம் எப்படி என பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
முதலில் தயங்கினாலும் கலாநிதி மாறன் பீஸ்ட் படம் தங்களுக்கு நல்ல லாபம் கொடுத்த படம் என்று சொல்லியதால் இந்த படத்தில் நடித்த ரஜினிகாந்த், ஜெயிலர் இசை வெளியீட்டின் போது நெல்சனை மிகவும் பாராட்டியிருந்தார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் ரஜினி ஆடியோ லாஞ்சில் பேசியதும்தான் என்கிறார்கள் ரசிகர்கள்.
இதனையடுத்து ரஜினி கூட்டணியில் உருவான ஜெயிலர் உலகம் முழுக்க பின்னி பெடலெடுத்து வருகிறது. இந்த படத்தின் வசூலே இந்த படம் மாபெரும் வெற்றிப்படம் என்று பறைசாற்றிவிட்டது. இந்த படத்துக்கு பிறகு நெல்சன் கொஞ்சம் நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு பின் மீண்டும் அடுத்த படத்துக்கான கதை விவாதத்தைத் தொடங்குவார் என்கிறார்கள். அடுத்து சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என்று மீண்டும் ஒரு ரவுண்டு எடுக்க போவதாக நெல்சன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் ஏற்கனவே கமிட் ஆகியிருக்கும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகும் நிலையில் முந்தைய நாளே இமயமலை பயணத்துக்கு திட்டமிட்டிருந்தார் ரஜினிகாந்த். அவருடன் நான்கு பேரும் இமயமலைக்கு சென்றனர். இமயமலைக்கு சென்று திரும்பியதும் 1 மாத காலம் ஓய்வெடுக்க திட்டம் வைத்திருக்கிறார். பின் செப்டம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் அடுத்து தசெ ஞானவேலோட படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்துக்கு வேட்டையன்னு பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதில் தெலுங்கு திரைப்பட நடிகர் நானி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் முடியாது என்று சொல்லிட்டாராம். அவர் குறிப்பிட்ட நாள்களில் வேற கால்ஷீட் கொடுத்து வேறு படங்களில் பணிபுரிய இருப்பதாகவும், இதனால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்றும் சொல்லிருக்காராம். அவருக்கு பதிலாக இப்போது இந்த படத்தில் மற்றொரு தெலுங்கு நடிகரான சர்வானந்தை இந்த கேரக்டரில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அமிதாப் பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டோரும் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.