துணிவு, வாரிசு படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை

Varisu, Thunivu Create Box Office Magic- அஜித் குமாரின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு தமிழ் படங்களும் பாக்ஸ் ஆபிஸில் தலா ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன.

Update: 2023-01-16 09:45 GMT

Varisu, Thunivu Create Box Office Magic- அஜித் குமாரின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு தமிழ் படங்களும் பாக்ஸ் ஆபீஸில் தலா ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன.

கடந்த வாரம் பொங்கலை ஒட்டி ஒரே நாளில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித் குமார் நடித்த துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியானதால் தமிழ் திரைத்துறை மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் மோதலை சந்தித்தது.

கடந்த 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அஜித் குமார் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நாளில் வெளியாகின. முதல் நாளில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் துணிவு முன்னிலை பெற்ற போதிலும், இரண்டாவது நாளில் இருந்து வாரிசு திரைப்படம் முன்னிலை பெற்றது.


வர்த்தக ஆதாரங்களின்படி, வாரிசு மற்றும் துணிவு இரண்டும் அதன் தொடக்க வார இறுதியில் இந்திய பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்துள்ளன. வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா இன்று ட்விட்டரில் இரண்டு படங்களும் இந்தியாவிற்குள் நன்றாக வருவதைப் பகிர்ந்து கொண்டார். இரண்டு படங்களும் இந்திய பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததை அவர் உறுதிப்படுத்தினார்.


விஜய்யின் வாரிசு படம் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முக்கிய சர்வதேச சந்தைகளில் அஜித்தின் திரைப்படத்தை விட பிரகாசமான வெற்றியை பெற்றுள்ளதால், உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் துணிவு படத்தை விட வாரிசு சிறிது முன்னிலை வகிக்கிறது. அமெரிக்காவில், வாரிசு ஏற்கனவே ஒரு மில்லியன் டாலர்களுக்கும் மேலாக வசூலித்துள்ளது. அதே நேரத்தில் துணிவு 9 ஆயிரம் டாலர்கள் வசூலித்துள்ளது.


கடந்த புதன் கிழமை தமிழகத்தில் வாரிசும், துணிவும் சம எண்ணிக்கையிலான தியேட்டர்களில்  திரையிடப்பட்டது. நள்ளிரவு ஒரு மணிக்கே காட்சிகள் திட்டமிட்டு ஒளிபரப்பப்பட்டதால்  ரசிகர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து இரண்டு படங்களின் வெளியீட்டையும் பெரிய அளவில் கொண்டாடினர்.


அஜித், இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் தொடர்ச்சியான மூன்றாவது கூட்டணியான துணிவு, வங்கிக் கொள்ளை மற்றும் த்ரில்லர் படமாகும். இப்படத்தில் மஞ்சு வாரியரும் முக்கிய வேடத்தில் நடிதுள்ளார். பெரும்பாலும் ஒரு வங்கிக்குள் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம். நிதி மோசடிகள் மற்றும் அது பொதுமக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த படம் விளக்குகிறது.

விஜய் நடித்துள்ள வாரிசு, தனது இரு மூத்த சகோதரர்களின் கடுமையான எதிர்ப்பைச் சமாளிக்கும் போது இளைய மகன் தனது தந்தையின் வணிக சாம்ராஜ்யத்தை கைப்பற்றுவது பற்றிய குடும்ப படமாகும். வம்ஷி பைடிபள்ளி இயக்கிய இப்படம், தெலுங்கில் விஜய்யின் அறிமுகத்தையும் குறித்தது, ஏனெனில் இப்படம் அதன் தமிழ் பதிப்போடு தெலுங்கு மொழியிலும் படமாக்கப்பட்டது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் ஜெயசுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Tags:    

Similar News