பன்முகத் திறமைக் கொண்ட தெலுங்கு நடிகர் மகேஷ் காத்தி மருத்துவமனையில் மரணம்
தெலுங்கு சினிமாவின் பிரபல திரைப்பட விமர்சகரான மகேஷ் காத்திக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு 'பெசராட்டு' என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.;
தெலுங்கு சினிமா திரைப்பட விமர்சகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்ட நடிகர் மகேஷ் காத்தி சமீபத்தில் நெல்லூரிலிருந்து தனது காரில் ஹைதராபாத் செல்லும்போது, லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
படுகாயமடைந்த அவர், கடந்த இரண்டு வாரங்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
தெலுங்கு சினிமாவின் பிரபல திரைப்பட விமர்சகரான மகேஷ் காத்திக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு 'பெசராட்டு' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். தெலுங்கு படங்களில் நடித்து வருவதோடு திரைக்கதை எழுத்தாளராகவும் பல படங்களுக்குப் பணியாற்றியுள்ளார்.
ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக்பாஸிலும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். தொடர்ச்சியாக 'சமூக வளர்ச்சிக்கு அறிவியல் ரீதியான பார்வையே சிறந்தது' என்பதை வலியுறுத்தி வந்தவர், ராமர், சீதாவை விமர்சித்து சிறைக்கும் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.