நந்தன், கடைசி உலகப் போர் உள்ளிட்ட 8 படங்கள்...! மகுடம் சூடப்போவது யார்?

நந்தன், கடைசி உலகப் போர் உள்ளிட்ட 8 படங்கள்...! மகுடம் சூடப்போவது யார்?

Update: 2024-09-14 08:15 GMT
நந்தன், கடைசி உலகப் போர் உள்ளிட்ட 8 படங்கள்...! மகுடம் சூடப்போவது யார்?
  • whatsapp icon

தி கோட் திரைப்படத்தின் இரண்டு வார கால ஆக்கிரமிப்பிலிருந்து திரையரங்குகள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி இப்போது புதிய பல திரைப்படங்களைத் திரையிட முன்வந்துள்ளனர். தமிழில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்த பதிவில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்களைக் குறித்து காண்போம்.

Tamil Movie Release this week | இந்த வார தமிழ் சினிமா

September 20th New Releases Tamil :

1. #KadaisiUlagaPor

2. #LubberPandhu

3. #Nandhan

4. #SattamEnKaiyil

5. #KozhiPannaiChelladurai

6. #Dhonima

7. #ThozharCheGuvara

8. #TheConfession

New Release Movies in Tamil | தமிழ் சினிமா இந்த வாரம்

September 20th Tamil 8 New Releases:

1. கடைசி உலகப் போர்


2. லப்பர் பந்து



 



3. நந்தன்


4. சட்டம் என் கையில்


5. கோழிப் பண்ணை செல்லதுரை


6. தோனிமா


7. தோழர் சே குவேரா

8. தி கன்ஃபெஸ்ஸன்


Tamil Movies Releasing This Week in Theatres | இந்த வார தமிழ்ப் படங்கள்

1. கடைசி உலகப் போர்

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் கடைசி உலக போர். ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மென்ட் என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகி வரும் செப்டம்பர் 20ம் தேதி வரவிருக்கும் அறிவியல் புனைகதை ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் இது. இப்படத்தில் ஆதியுடன் நாசர் , நடராஜன் சுப்ரமணியம் , அனகா , என்.அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன் , முனிஷ்காந்த் , சிங்கம்புலி , கல்யாண் மாஸ்டர் , இளங்கோ குமரவேல் , தலைவாசல் விஜய் , மகாநதி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்

2. லப்பர் பந்து

தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இதில் ஸ்வாஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணனன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

3. நந்தன்

‘கத்துக்குட்டி’, ‘உடன் பிறப்பே’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இரா.சரவணன் எழுதி, இயக்கியிருக்கும் அவருடைய மூன்றாவது படம்தான் “ நந்தன்”. சசிகுமாரின் அட்டகாசமான நடிப்பில் உருவாகியுள்ளது இந்த திரைப்படம். இதில், பாலாஜி சக்திவேல், நிலா துரை சுதாகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

4. சட்டம் என் கையில்

'சிக்ஸர்' திரைப்படத்தை இயக்கிய சாச்சி இயக்கத்தில் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

5. கோழிப் பண்ணை செல்லதுரை

'தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை' ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் தற்போது 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்கிற பெயரில் புதிய படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஏராளமான புதுமுகங்களான ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.

6. தோனிமா

ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர் காளி வெங்கட் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தோனிமா. இதில் ரோஷினி பிரகாஷ், வைசவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜெகதீசன் சுப்பு, சிகை, பக்ரீத் படங்களை இயக்கியவர். படத்தை சாய் வெங்கடேஷ்வரன் தயாரிக்கிறார். பாக்யராஜ், சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜான்சன் இசை அமைத்துள்ளார்.

7. தோழர் சே குவேரா

ஏ.டி.அலெக்ஸ் இயக்கத்தில் சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் 'தோழர் சேகுவாரா'. மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

8. தி கன்ஃபெஸ்ஸன்

Tamil Movie Release This Week Download | இந்த வாரம் திரையரங்கில் வெளியான படங்கள்

தமிழ் சினிமாவில் இந்த வாரம் மொத்தம் 8 படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. வரும் செப்டம்பர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில்

1. கடைசி உலகப் போர்

2. லப்பர் பந்து

3. நந்தன்

4. சட்டம் என் கையில்

5. கோழிப் பண்ணை செல்லதுரை

6. தோனிமா

7. தோழர் சே குவேரா

8. தி கன்ஃபெஸ்ஸன் ஆகிய 8 திரைப்படங்கள் ரிலீஸாகின்றன. இதில் கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், சட்டம் என் கையில், கோழிப்பண்ணை செல்லதுரை ஆகிய படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது.

New Movie Releases This Week | புதுப்படங்கள் இந்த வாரம்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் செப்டம்பர் 20ம் தேதி விருந்தாக அமைய உள்ளது. மொத்தம் 8 புதிய திரைப்படங்கள் திரையரங்குகளை அலங்கரிக்க உள்ளன. இந்த படங்களில் சிலவற்றின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. ஒவ்வொரு படமும் வெவ்வேறு கதைக்களங்களுடன் ரசிகர்களை கவர தயாராகி வருகிறது. இந்த திரைப்படங்கள் திரையுலகில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News