தமிழ் திரைப்பட நடிகை தீபா சென்னையில் தூக்கிட்டு தற்கொலை
தமிழ் திரைப்பட நடிகை தீபா சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் துணை நடிகை தீபா என்ற பவுலின். இவர் வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். தீபா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 29.
இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா். காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தார். அதன்மூலம் தமிழகத்தில் பிரபலமடைந்தார். அறிமுக இயக்குனர் மகிவர்மன் என்பவரின் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் அவருடன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவைக்கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தீபாவின் உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் போனை எடுக்காததால் அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தபோது தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தீபா தற்கொலை செய்வதற்கு முன்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.