'ஜெயிலர்' படத்தில் தமன்னா: எந்த கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா?
Tamanna role in jailer movie-ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tamanna role in jailer movie-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் துவங்கியது. இந்நிலையில் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் விநாயகன் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் தமன்னா நடிக்க இருப்பதாகவும் அவர் ரஜினியின் மகள் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தமன்னாவின் காட்சிகள் மிகவும் குறைவு என்றும், அவர் பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே தோன்றும் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்தது ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.