அப்ப விக்ரமுக்கும் சூர்யாவுக்கும் சண்டையில்லையா? இத கேளுங்க..!
ரசிகர்களே எதிர்பாராத விதமாக சூர்யா தனது டிவிட்டர் கணக்கிலிருந்து தங்கலான் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
நடிகர்கள் விக்ரம், சூர்யா இருவருக்குமிடையில் பனிப்போர் நடந்து வருவதாகவும் இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை, வாழ்த்துவதில்லை என கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் பேச்சு உண்டு.
பிதாமகன் படத்தின்போது உண்டான பிரச்னையால் பின்னாளில் உரச அதன்மூலம் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு எழுந்ததாக பலரும் பேசியுள்ளனர். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இந்நிலையில், சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்துக்கு நல்ல பாடல்களையும் கொடுத்து பின்னணி இசை அமைத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்குமார்.
பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்ட்டகிரோன் நடித்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.
ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்துக்கு இப்போதே பாசிடிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. படத்தை பார்த்தவர்களிடமிருந்து நல்ல ரிப்போர்ட் கிடைத்து வருகிறது. இந்த படத்தின் திரையரங்கு உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது.
அஜித், விஜய்யுடன் போட்டி போடும் சூர்யா ரசிகர்கள், விக்ரமுடனும் போட்டிக்கு நிற்பார்கள். பெரிய அளவில் விக்ரமுக்கு வெறுப்பாளர்கள் இல்லை என்றாலும், சூர்யா ரசிகர்களுக்கு விக்ரம் போட்டியாளராக கருதக் கூட மாட்டார்கள்.
இதனிடையே, ரசிகர்களே எதிர்பாராத விதமாக சூர்யா தனது டிவிட்டர் கணக்கிலிருந்து தங்கலான் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
#Thangalaan…!
— Suriya Sivakumar (@Suriya_offl) August 14, 2024
THIS WIN WILL BE HUGE!! @chiyaan @beemji @parvatweets @MalavikaM_ @gvprakash @NehaGnanavel @GnanavelrajaKe @OfficialNeelam@StudioGreen2 @SakthiFilmFctry pic.twitter.com/nNij8gwqqb
இது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என அவர் டிவீட்டில் வாழ்த்தியுள்ளார்.
Thank you @Suriya_offl.
— Vikram (@chiyaan) August 14, 2024
இதற்கு நன்றி தெரிவித்து விக்ரமும் பதிலளித்துள்ளார். ஆனால் இவை மிகவும் ஃபார்மலாக இருப்பது ரசிகர்களின் கண்களை உறுத்துகிறது. ஏனென்றால் வழக்கமாக ஒருவரை வாழ்த்துவதென்றால் நண்பர் என்றோ மரியாதை நிமித்தமாக ஏதாவது ஒன்றை சொல்லியோ, அவர்களது திறமையை பற்றி பேசியோ பதிவிடுவதுதான் இயல்பு. ஆனால் சூர்யாவும் சரி, விக்ரமும் சரி மேம்போக்காக ஜஸ்ட் லைக் டேட் எனும் வகையில் பதிலளித்துள்ளார்.
நாளை தங்கலான் திரைப்படம் வெளியாகும் நிலையில், சூர்யா வாழ்த்து தெரிவித்திருப்பது ஒரு பக்கம் சிறப்பானதாக பார்க்கப்பட்டாலும் அவர்களுக்கு இடையில் முன்பு போல பேச்சுவார்த்தை இல்லை என்பது மட்டும் தெரியவருகிறது.
காரணம் என்ன?
சூர்யா நடிக்கும் கங்குவா படத்தையும் சரி, விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தையும் சரி இயக்குவது சூர்யாவின் உறவினர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்தான். அவர்தான் வற்புறுத்தி சூர்யாவை வாழ்த்து போட சொல்லியிருப்பார் எனவும் சிலர் பேசி வருகின்றனர். மேலும் விக்ரமும் கங்குவா படத்துக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.