நடிகை நயன்தாரா திருமணத்தில் வாழ்த்திய சூர்யா - ஜோதிகா படம் வெளியீடு
நடிகை நயன்தாரா திருமணத்தில் சூர்யா - ஜோதிகா கலந்துகொண்டு புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டு உள்ளார்.;
நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலின் பிரமாண்டமான அரங்கில் நிகழ்ந்து முடிந்தது. திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திருமணத்தில் கலந்துகொண்டனர். குறிப்பாக, அரங்கத்தினுள் செல்போன் மற்றும் கேமரா கொண்டுசெல்ல அனுமதி இல்லை.
அதனால், திருமணத்தில் கலந்து கொண்ட எவரும் மணமக்களை வாழ்த்திய புகைப்படங்களை பகிர்ந்து மகிழ இயலாமல் போனது. இதில், பெரும்பாலானோர்க்கு மன வருத்தம்தான்.
இந்தநிலையில், விக்னேஷ் சிவன் தற்போது, திருமணத்தில் கலந்து கொண்டு தங்களை வாழ்த்தும் பிரபலங்களோடு உள்ள புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளிட்டு வருகிறார்.
அதன்படி, சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் கலந்து கொண்ட புகைப்படத்தை தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.