சூர்யா 43 ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்ட களம்? சூர்யாதான் இவரா?
சூர்யா 43 படத்தின் கதை என்னவாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.
கங்குவா படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் விரைவில் புதிய படம் ஒன்று உருவாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தான் தொடங்கும் எனவும் சூர்யா தற்போது கங்குவா படத்தில் மிகவும் பிஸியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா என தமிழ், மலையாளம், ஹிந்தி பட உலகின் முக்கியமான நடிகர்கள் நடிக்கவுள்ள இந்த படத்தில், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலிருந்தும் நடிகர்கள் ஒப்பந்தமாவார்கள் என்று கூறுகிறார்கள்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் 2டி நிறுவனம் சார்பில் ஜோதிகா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூரரைப் போற்று படத்துக்கு பிறகு சுதா கொங்கரா, சூர்யா இணையும் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
படத்தில் நஸ்ரியாவுடன் இன்னும் இரண்டு ஹீரோயின்கள் நிச்சயமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அநேகமாக அவர்களில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீநிதி ஷெட்டியும் படத்தில் இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா 43 கதை
சுதா கொங்கரா, சூர்யா இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் கதை, தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா ஹிந்தி எதிர்ப்பு போராளியாக நடிக்கிறார் எனவும் அந்த காலக்கட்டத்தில் ஒரு காதலும், ஹிந்தி எதிர்ப்பு பிரச்னையால் ஏற்படும் தாக்கமும் குறித்து பேசப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. முழுக்க முழுக்க அரசியலை வைத்து வெளுத்து வாங்க போகிறார் சுதா கொங்கரா என்று கூறப்படுகிறது.
சூர்யா ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று மரணமடைந்த தலைவர்களில் ஒருவராக நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அப்டேட்
சூர்யா 43 படத்தின் ஷூட்டிங் தொடங்க நாட்கள் இருந்தாலும், இப்போதே படத்தை அறிவிப்பதற்கான காரணம் குறித்து சரியான விவரங்கள் தெரியவில்லை. ஆனால் சூர்யா இப்போது நடித்து வரும் கங்குவா படம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. இந்தப் படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தக் கதாபாத்திரத்திற்காக சூர்யா தற்போது சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார்.
இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், இந்தப் படம் 2024 ஆம் ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்தப் படம் சூர்யாவின் 43வது படம் என்பதால், இது ஒரு முக்கியமான படமாக கருதப்படுகிறது.
இந்தப் படம் ஒரு அரசியல் திரில்லராக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.முக்கியமாக ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து நிறைய காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.