'சூர்யா 42' படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியீடு

Suriya 42 - இயக்குநர் சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்தின் 'மோஷன் போஸ்டர்' இன்று வெளியிடப்படுவதால், சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Update: 2022-09-09 06:53 GMT

suriya 42, suriya 42 director- சூர்யாவுடன் இயக்குநர் சிவா மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.

Suriya 42 -இயக்குநர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.  'சூர்யா 42' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, 'ஸ்டுடியோ கிரீன்' மற்றும் 'யுவி கிரியேஷன்' நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.


இந்நிலையில் 'சூர்யா 42' படத்தின் புதிய 'அப்டேட்'டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் 'மோஷன் போஸ்டர்' இன்று (09.09.2022) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News