KGF, பாகுபலி படங்களை ஓடவிட தயாராகும் தமிழ்ப்படம்!
பாகுபலி, கேஜிஎஃப் ஆகிய படங்களைத் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு உருவாகி வருகிறது சூர்யா நடிக்கும் சூர்யா 42 திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
உலக அளவில் இந்த படம்தான் இந்தியாவின் மிகப் பெரிய வசூல் சாதனை படமாக வரப்போகிறது. இதற்கான டீசரும் தயாராகி வருகிறது. விரைவில் இந்த டீசர் வெளியிடப்படும்போது இந்திய திரையுலகமே வியந்து பாராட்டும் என்று கூறியுள்ளார் சூர்யா 42 படத்தின் தயாரிப்பாளர் கே இ ஞானவேல்ராஜா.
இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சம் என்றால் அது பாகுபலி, கேஜிஎஃப் படங்கள்தான். இதைப்போல உருவான பொன்னியின் செல்வன் ஏனோ ஹிந்தியில் பெரிய அளவில் எடுபடவில்லை. அதற்கு காரணம் தமிழ், தமிழர்கள் என்ற பாரபட்சமாக இருக்கலாம். அதனால் அதற்கான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி விளம்பரங்களும் அந்த அளவுக்கு இருக்கவேண்டும். இப்படி எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் வகையில் திட்டமிட்டுள்ளனர் சூர்யா 42 படக்குழுவினர்.
பாகுபலி, கேஜிஎஃப் ஆகிய படங்களைத் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு உருவாகி வருகிறது சூர்யா நடிக்கும் சூர்யா 42 திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
இதுவரை 50 சதவிகித ஷூட்டிங் முடிந்துவிட்டதாகவும் மிகவும் நேர்த்தியான பிரம்மாண்டமான படமாக உருவாகி வருகிறதாம் சூர்யா 42. படத்துக்கான டைட்டில் ரெடியாகிவிட்ட நிலையில், ஏப்ரல் 14ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதுவரை சூர்யா நடிப்பில் உருவான அதிக பட்ஜெட் படத்தின் மொத்த செலவையும் சூர்யா 42 படத்துக்கு விளம்பரத்துக்காக பயன்படுத்தப் போகிறார்களாம்.
சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் மிகப் பெரிய ட்ரீட் காத்திருக்கிறது என்கிறார்கள். டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் எனவும் அதனைத் தொடர்ந்து சில மாதங்களில் படத்தின் டீசர் வெளியாகும் எனவும் பேசப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேநேரம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டைட்டிலுடன் சேர்த்து வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் வேற லெவலுக்கு தெறிக்கும் என்று கூறப்படுகிறது. தீபாவளி தினத்தில் முதல் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.