Suriya 42 பர்ஸ்ட் லுக் முதல் ரிலீஸ் தேதி வரை அனைத்தும் இங்கே!

தசரா பண்டிகையின்போது படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும், தோற்றங்களும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. பின்னர் தீபாவளிக்கு சிறந்த அப்டேட்களைத் தர திட்டமிட்டிருக்கிறது படக்குழு.;

Update: 2023-02-10 10:51 GMT
சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டர்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. சூர்யா 42 என அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். பாலிவுட் நடிகையான இவர் தோனி படத்தில் அவரின் முதல் காதலியாக வருவார்.

சூர்யா 42 படப்பிடிப்பு அதி வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே விரைவில் படத்தின் பெயரையும் அறிவிக்க இருக்கிறார்களாம். அதோடு சேர்த்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் 14ம் தேதி டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இதனைத் தொடர்ந்து சூர்யா பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி இரண்டாவது லுக் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் படத்தின் முதல் சிங்கிள் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

தசரா பண்டிகையின்போது படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும், தோற்றங்களும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. பின்னர் தீபாவளிக்கு சிறந்த அப்டேட்களைத் தர திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

படத்தின் டீசர் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் முதல் புரமோசன் பணிகளைத் துவக்குகிறது படக்குழு. சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். மேலும் மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்லத் திட்டமிட்டிருக்கின்றனர்.

புத்தாண்டு தினத்தில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்படவுள்ளது. மேலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு படம் ரிலீசாகும் என்றும் திட்டமிடப்பட்டிருக்கிறது. 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் உலகம் முழுக்க மிகப் பெரிய பொருட்செலவில் வெளியிடப்படவுள்ளது. வரலாற்றுப் படம் என்பதால் நிச்சயம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News