மகளுக்கு திருமணம்..! அப்பா சூப்பர் ஸ்டாருக்கே தெரியாது? என்ன கொடுமை சார் இது..!

இதுவரை அவரின் மகள் தனது திருமணம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.;

Update: 2024-06-11 12:00 GMT

மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், அது பற்றி அவரது அப்பாவான சூப்பர் ஸ்டார் நடிகரிடம் கேட்டபோது அது குறித்து தனக்கு எந்த தகவலும் தெரியாது என்று சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்திருந்தார் சோனாக்ஷி சின்ஹா. இவர் லிங்கா படத்தில் நடித்த தாத்தா கதாபாத்திரத்தில் வரும் லிங்கேஷ்வரனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் 2014ம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியானது. அதீத எதிர்பார்ப்புகளுடன் வெளியானாலும் படம் படுமொக்கையாக இருந்ததால் படம் ஒரே நாளில் மண்ணைக் கவ்வியது.

படத்தில் ரஜினிகாந்த் இருந்ததால் படம் ஓரளவு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. ஆனால் சரியாக போகாத இந்த படத்துக்கு பிறகு கே எஸ் ரவிக்குமாரின் மார்க்கெட் அப்படியே இறங்கியது. அவர் அந்த படத்துக்கு பிறகு படமே இயக்காமல் நிறுத்திக்கொண்டார்.

சோனாக்ஷி சின்ஹா இந்த படத்துக்கு பிறகு தமிழில் தலைகாட்டவே இல்லை. பாலிவுட்டில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தவர், அக்ஷய் குமார், சல்மான் கான், சைஃப் அலிகான், சாகித் கபூர் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில், சோனாக்ஷி சின்ஹா தற்போது காதலித்து வருவதாக தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்து வரும் சோனாக்ஷி, ஹிந்தி நடிகர் ஜாஹீர் இக்பாலை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறாராம். வரும் ஜூன் 23ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

சோனாக்ஷி சின்ஹாவின் அப்பா சத்ருகன் சின்ஹாவும் ரஜினிகாந்தும் நண்பர்கள். இந்த திருமணம் குறித்து நடிகர் சத்ருகன் சின்ஹாவிடம் கேட்டபோது அவர் இதுகுறித்து தனக்கு எந்த தகவலும் தெரியாது என்று கூறிவிட்டார். தனது மகள் இதுபற்றி எனக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை, எனக்கு அழைப்பும் இதுவரை விடுக்கவில்லை என்று கூறிவிட்டு சென்றார். ஒருவேளை இஸ்லாமியரை அவர் திருமணம் செய்ய இருப்பதால், தீவிர இந்துத்துவா ஆதரவாளரான சத்ருகன் சின்ஹா இதனை தெரிவித்தாரா, அல்லது காதல் திருமணம் என்பதால் வேடிக்கையாக இதை தெரிவித்தாரா என்பது தெரியவில்லை.

இதுவரை சோனாக்ஷி தனது திருமணம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News