தொடங்குகிறது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 - அட்டகாசமான போட்டியாளர்களுடன்!
Super Singer Junior 9 Promo-சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 தொடங்கும் தேதி, ஒளிபரப்பாகும் நாள், ஒளிபரப்பாகும் சேனல், போட்டியாளர்கள் உள்ளிட்ட தகவல்களைக் காண்போம்.;
Super Singer Junior 9 Promo-சூப்பர் சிங்கர் சீசன் 9 முடிந்துள்ள நிலையில், அடுத்து உடனடியாக துவங்குகிறது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9. செல்லக்குரலுக்கானத் தேடல் ஜூலை முதல்.
அபிஜித், அருணா , பூஜா, பிரியா , பிரசன்னா ஆகிய 5 பேரும் சீனியர் சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று போட்டியாளர்களாக தேர்வாகியிருந்தனர். இந்த சுற்றில் மோதும் இந்த 5 பேரில் ஒருவருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு போட்டி தொடர்ந்தது.
வெற்றியாளர்களுக்கான அறிவிப்பை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார். மூன்றாவது இடத்தை பிரசன்னா பிடித்ததாக அறிவித்தார் ஹாரிஸ், அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.
பல ஆன்மீகப் பாடல்களைப் பாடி அசத்தியிருந்த அருணா முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்தது. மேலும் அருணாவுக்கு ரூ.பத்து லட்சம் ரொக்கமாக தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.இரண்டாவது இடத்தைப் பிடித்த பிரியா ஜெர்சனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆடிசன்கள் நடந்து முடிந்துவிட்டன. இதிலிருந்து நல்ல திறமையான குழந்தைகள் போட்டி போட தயாராகியுள்ளன.
புரோஹிதா ஸ்ரீ, கென்லி சிஜா, கலர்வெடி கோகுல், விஸ்வா ரூபினி, சமீரா என 5 போட்டியாளர்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
எப்போது துவங்குகிறது?
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 வரும் ஜூலை மாதம் 8ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2