இன்ஸ்டாநியூஸ் சினிமா ஞாயிறு அப்டேட் தகவல்🔥

முதன் முறையா ஜகமே தந்திரம் 17 மொழிகளில் டப் செய்யப்படுதாம்.. இத்தனைக்கும் படம் ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸாகும்;

Update: 2021-05-30 06:55 GMT

சினிமா ஞாயிறு அப்டேட் ரிப்போர்ட்🔥

ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டியில் வெளியானாலும் அதிக மொழிகளில் டப் செய்யப்படவில்லை. முதன் முறையா ஜகமே தந்திரம் 17 மொழிகளில் டப் செய்யப்படுதாம்..

இத்தனைக்கும் படம் ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸாகும் சூழலில், நாளை ஜூன் 1 -ம் தேதி ட்ரைலர் வெளியாகுதாம் .

இதுக்காக புரொடக்‌ஷன் குரூப்-பிடம் இன்னிக்கு மீடியாவைக் கூப்பிட்டு ஒரு ஜூம் மீட் போட்டு புரோமோசன் பண்ணச் சொல்லி நெட்பிளிக்ஸ் நெருக்கடி கொடுத்து இருக்குதாம்..

அதையடுத்து புரொடக்‌ஷன் டீம் சில பல மீடியாக்களை ஜூம் மீட்-ட்டுக்கு கமிட் செய்ய அழைத்த போது 'தனுசும் வர மாட்டார். கார்த்திக் சுப்புராஜூம் வர மாட்டார்.ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் வர மாட்டார்.இப்படி இருக்கையில் இந்த மீட்டுக்கு நாங்கள் ஏன் வர வேண்டும்" என்று சிலரும், வேறு சிலர், 'ஜூம் மீட்-டுனா? புரோமோசன் சாட்-தானே? உங்க பட புரொமோசனுக்கு எங்க நெட்டில் எங்க நேரத்தை செலவு செஞ்சு எங்களுக்கு என்ன பிரயோஜம்' அப்படீன்னு ஒப்பனா கேட்டாய்ங்களாம்.

ஹூம் ஏற்கெனவே மீடியா என்ற பெயரில் யார், யாரோ பிரஸ் மீட்டுக்கு வருவது போல் இந்த ஜூம் மீட்டுலேயும் நம்மாளுங்களை மீடியா-ங்கற பேர்லே உட்கார வச்சி கணக்கு காட்டிடுவோமுன்னு தயாரிப்பு தரப்பு யோசிச்சு வருதாம் . 

Tags:    

Similar News