Sundari அனுவுக்கு மாப்பிள்ளைத் தேடல்! சிவா செய்யும் குழப்பம்!
சுந்தரியும் அப்பத்தாவும் அம்போ என கடையில் நிற்க அங்கிருந்து சென்று விடுகிறான் கார்த்திக். இதனால் கடுமையாக கோபப்படுகிறார் அப்பத்தா. அவரு வரட்டும் நான் பேசிக்கிறேன் என்கிறாள் சுந்தரி.
சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 9th May 2023
சுந்தரியும் அப்பத்தாவும் அம்போ என கடையில் நிற்க அங்கிருந்து சென்று விடுகிறான் கார்த்திக். இதனால் கடுமையாக கோபப்படுகிறார் அப்பத்தா. அவரு வரட்டும் நான் பேசிக்கிறேன் என்கிறாள் சுந்தரி.
இதனிடையே அங்கு அனு வீட்டில் கார்த்திக் இருக்கிறான். அனுவின் உயிர்த் தோழன் சிவா சில ஃபோட்டோக்களைக் காட்டி கார்த்திக்கிடம் இதில் யாரு அனுவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கேட்கிறார். அதற்கு கார்த்திக் அவங்கள எதுக்கு அனுவுக்கு பிடிக்கணும் என்று கேட்கிறார்.
சிவாவோ அவங்க எல்லாரும் அனுவுக்காக பார்த்துருக்க மாப்பிள்ளைங்க. இவங்கள்ல ஒருத்தரத் தான் அனுவுக்காக மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கோம்னு சொல்ல கார்த்திக் கோபப்பட்டு சிவாவின் சட்டையைப் பிடிக்கிறான். அங்கிருந்து அனு மெல்ல அந்த இடத்துக்குள் வருகிறாள்.
சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 8th May 2023
சுந்தரியின் அப்பத்தாவிடம் பொய் சொல்லி சத்து மாத்திரை என தூக்க மாத்திரையைக் கொடுத்து சுந்தரிக்கு கொடுக்கிறான். அப்பத்தாவும் வெகுளித்தனத்தால் இதனை சுந்தரிக்கு பாலில் கலந்து கொடுத்துவிடுகிறார். அதனையடுத்து இரவு அசந்து தூங்கிவிடுகிறாள் சுந்தரி. காலையில் எழுந்ததும் அதிர்ச்சி. ஒரே படுக்கையில் கார்த்திக்குடன் சுந்தரி படுத்து இருந்ததை பார்த்து பதறியடித்து எழுகிறாள் சுந்தரி.
தன்னை ஏதோ செய்துவிட்டதாக முதலில் சுந்தரி நம்பினாலும் அடுத்தடுத்து கார்த்திக் பேச பேச நடந்ததை புரிந்து கொள்கிறாள். தனக்கு ஏதோ நடந்ததை உணர்ந்த அவள், அப்பத்தாவிடம் சென்று கேட்க அனைத்தையும் சொல்கிறாள் அப்பத்தா. இதன் பின்னர் கார்த்தியிடம் வந்து சண்டை போட ஆரம்பிக்கிறாள். ஆனால் கார்த்தி தான் பழிவாங்குவதைக் கூறுகிறான்.
இதனை அடுத்து அவள் மல்லிகாவிடம் சென்று நடந்ததைக் கூறி ஆறுதல் தேடுகிறாள். மல்லிகாவும் அவளுக்கு ஆறுதல் கூற, அந்த நேரம் பார்த்து அனுவின் உயிர்த் தோழன் சிவா அங்கு வருகிறார். அவருக்கு அனைத்து விசயங்களும் தெரியும் என்பதை மல்லிகா சொல்கிறார். சுந்தரி கார்த்திக்கை செருப்பால் அடித்ததை பார்த்துவிட்டு தன்னிடம் சிவா வந்து கேட்கும்போது அனைத்தையும் கூறிவிட்டேன் என்று கூறுகிறார்.
சிவா, சுந்தரியைப் பற்றி பெருமிதமாக கூறினாலும் பின் அனுவின் வாழ்க்கையைக் கெடுத்து கார்த்திக்கை தான் சும்மா விடப்போவதில்லை. அனு எனக்கு சகோதரி போன்றவர் என திட்டம் தீட்டுகிறார் டாக்டர் சிவா.
இந்நிலையில், மணியும் சித்துவும் சுந்தரியை வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். சித்துவின் அப்பா மணியைக் காண வீட்டுக்கு வந்த சுந்தரி அவரின் உடல் நலம் குறித்து விசாரிக்கிறார். சுந்தரியுடன் வந்த கிருஷ்ணா நடந்த விசயங்கள் அனைத்தும் தெரியுமா என்று கேட்கிறார். அதற்கு ஆமா எல்லா விசயங்களும் தெரியும் என்று கூறுகிறார் மணி.
கிருஷ்ணாவும் சுந்தரியும் விசயம் புரியாமல் எதற்கு வரச் சொன்னீர்கள் என்று எப்படி கேட்பது என்பதை அறியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார்கள். மணி சித்துவுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று யோசித்து வருவதாகவும் இவன் அம்மாவும் படுத்த படுக்கையாக இருக்கிறாள் என்னையும் சித்துவையும் பார்த்துக்கொள்ள வேற யாரு இருக்கா என்று கேட்டார் மணி.
யாரும் இல்லையா என்று கேட்டு சுந்தரி தான் இருப்பதாக கூறுகிறாள். அனுவைப் பார்த்துக் கொண்டதும், அனுவின் அம்மா மல்லிகாவைப் பார்த்து வீட்டுக்கு கொண்டு வந்ததும் மணி மெச்சி கூறுகிறார். இதனிடையே தனது மனதில் இருக்கும் ஆசையையும் மனம் திறந்து பேசுகிறார். சுந்தரியை தன் வீட்டுக்கு மருமகளாக வரச் சொல்லி கேட்கிறார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சியடைகிறார் சுந்தரி.
ஆனால் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சித்து உடனே கூறிவிடுகிறார். சித்து தான் வேண்டாம் என எத்தனையோ முறை கூறியும் அப்பா மணிதான் இதைக் கேட்கிறார். நான் இதனை பேசவேண்டாம் என்றுதான் கூறினேன் என்கிறார். இதில் என்ன தவறு, இதனை யோசிக்குமாறு கிருஷ்ணா கூற, கோபப்பட்டு கிருஷ்ணாவைத் திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
வீட்டில் கார்த்திக் அப்பத்தாவிடம் சுந்தரியை தன்னுடன் வெளியில் வரச் சொல்லுமாறு கேட்கிறான். அப்போது சுந்தரி வீட்டில் இல்லை. அதனால் அப்பத்தாவிடம் அவன் சுந்தரி பற்றி பேசி மயக்கி, அப்பத்தாவை கைக்குள் போட முயற்சிக்க, அருகிலிருந்த கார்த்திக்கின் அக்கா மகள் அவனை முறைத்துக் கொண்டே இருக்கிறாள். அந்த நேரம் பார்த்து சுந்தரி அங்கு வருகிறாள். இடையில் கார்த்திக் தன்னை மாமா என்று சுந்தரி அழைக்க வேண்டும் என்று கேட்கிறான். அப்பத்தாவும் சுந்தரியைக் கட்டாயப்படுத்த அவளும் வேண்டா விருப்பாக மாமா என்கிறாள். அதன்பின்னர் அப்பத்தா சுந்தரியை கார்த்திக்குடன் போக சொல்கிறார்.
சுந்தரி தனக்கு வேலை இருப்பதாகவும் அதனால் போக முடியாது என்றும் கூற, அப்பத்தா அவளைக் கட்டாயப்படுத்தி தானும் உடன் செல்கிறார். அப்போது அவர்கள் மால் ஒன்றுக்கு செல்கிறார்கள். அங்கு மாமா இப்பதான கூட்டியாந்திருக்காரு அவர ஒரு வழி பண்ணிட வேண்டியதுதான் என்கிறாள் சுந்தரி. கொஞ்ச நேரத்தில் அப்பத்தாவிடம் சுந்தரி மாமா இப்படித்தான் பேசிட்டு இருப்பாரு ஆனா நமக்கிட்ட சொல்லாமலே விட்டுட்டு ஓடிடுவாரு. இப்படி பல தடவை நடந்துருக்கு கைய நல்லா புடிச்சி வை என்று சொல்கிறாள். சொன்னபடி கார்த்திக் அவர்களை விட்டுவிட்டு சென்று விடுகிறான்.
சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 10th May 2023
கார்த்தி, அனுவுக்கும் சுந்தரிக்கும் துரோகம் செய்ததை அறிந்த அனுவின் உயிர் தோழன் சிவா, கார்த்தியை தண்டிக்கப்போவதாக கூறுகிறார். இதனால் அடுத்து என்னென்ன நடக்கப்போகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.