Sundari கார்த்திக்கு ஆப்பு வைத்த அருண்! கிருஷ்ணாவிடம் குமுறும் சுந்தரி!

Sundari Today Episode Update -கார்த்திக் ஜாமீன் போட்டு வெளியில் கொண்டு வந்த அருண், இப்போது டிமிக்கி கொடுக்க போலீஸ் கார்த்திக்கை நெருக்குகின்றது.

Update: 2023-06-30 07:05 GMT

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 30th June 2023

விரைவில் அப்டேட் செய்யப்படும்


Full View

சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode 29th June 2023

Sundari Today Episode Update -கார்த்திக் அனு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அங்கு சுந்தரி வருகிறாள். அனுவும் சாப்பிடுவாள் என எதிர்பார்க்கப்படும்போது அந்த நேரத்தில் சுந்தரியை அமரச் சொல்கிறாள் அனு. அப்போது கார்த்திக் எழுந்து செல்கிறான். இதனால் ஏன் கார்த்திக் சார் எழுந்து போகிறார் என அனுவிடம் சுந்தரி கேட்க, அதுக்கு நீ ஏன் கவலை படுற என்று கேட்கிறாள் அனு.

ஐஏஎஸ் தேர்வு எழுதிட்டு வந்துருக்க ஒரு வார்த்தை என்கிட்ட வந்து எதுவும் சொல்லல, ஒரு ஃபோன் கூட பண்ணல என அனு கேட்க, அதற்கு வீட்ல அக்கா, மாமா வந்திருந்தாங்க அதனால வரமுடில என்று சுந்தரி கூறுகிறாள். சரி இருக்கட்டும் நாம கோவிலுக்கு போய்ட்டு வரலாமா என்று அனு, சுந்தரியிடம் கேட்க அதற்கு சரி என்று சொல்லிவிட்டு எழுந்து செல்கிறாள் சுந்தரி.

சுந்தரி போயி ரொம்ப நேரமாச்சே இன்னும் காணலேயே என்று அப்பத்தா தேடிக் கொண்டிருக்கிறாள். உடனே வந்திடுறேன்னு சொன்ன அவ புருசனையும் காணோம். இவளுக்கு பரிட்சை முடிஞ்சிடிச்சு. வேலையையும் அவர உட சொல்லியாச்சு. ரெண்டு பேரையும் காணோமே என அப்பத்தா கூறுகிறார்.

நீங்கதான் அப்பத்தா செல்லம் குடுத்து வச்சிருக்கீங்க என்று கார்த்திக்கின் அக்கா சொல்ல, அதற்கு நீதான் அவரோட அக்கா, நீதான் அவர சொல்லி சத்தம்போடணும்னு அப்பத்தா சொல்கிறார். என்னதான் இருந்தாலும் அவரு எங்க வீட்டு மாப்பிள்ளை எப்படி என்னால கேட்கமுடியும். அப்போ கிருஷ்ணா அங்க வருகிறான். என்கிட்ட சொல்லாம அவங்க வீட்டுக்கு போயிருக்கா என்றதும், மாலினி அந்த நேரத்தில் அங்கு வருகிறாள். தன்னிடம் சொல்லிவிட்டுதான் சென்றாள், சுந்தரி இப்போ அனு மேடம் வீட்டுக்கு போயிருக்கா என்றதும் கிருஷ்ணா கோபப்படுகிறான்.

பெரியவங்ககிட்ட கேட்காம எதுக்கு போறா அவ என்று கேட்கிறான். என்னாச்சு கிருஷ்ணா என்ற லட்சுமிக்கு பதில் சொல்கிறார் அப்பத்தா. நீ உன் தம்பிய எதையும் கேட்கறதே இல்ல. அவன்தான கேக்கணும். புருசனும் பொண்டாட்டியும் அங்கேயே கதியா கெடக்குறாங்க. புள்ளைகள பெத்து நாம என்ன அவங்களுக்கு நேந்தா விட்டிருக்குறோம் என அப்பத்தா ஏத்தி விடுகிறார்.

ஏன் அப்பத்தா, கிருஷ்ணா ஏற்கனவே டென்சனா இருக்கான். நீங்க ஏத்தி விடாதீங்க. கிருஷ்ணா கோபப்படாத, சுந்தரி இங்கதான் போயிருக்கா வந்துடுவா. நீ போயி ஆரம்பிச்ச வெப்சீரிஸ பாத்து முடி என்று கூறுகிறாள். உடனே லட்சுமி மாலினியிடம் ஏன்மா கிருஷ்ணா இப்படி கத்துறான். என்ன பிரச்ன என்று கேட்கிறாள். மாலினியும் ஏதோ சொல்லி சமாளிக்கிறாள்.

ஆனால் அப்பத்தாவுக்கு ஏதோ ஒரு டவுட் இருக்கிறது. ஆக மொத்தம் இந்த குடும்பத்துல யாருக்கும் அக்கற இல்ல என்று புலம்பிக் கொண்டிருக்கிறாள் அப்பத்தா.

கோவிலில் அனுவும் சுந்தரியும் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். சுந்தரி மீன ராசி, ரேவதி நட்சத்திரம் என அர்ச்சனைக்கு கொடுக்கிறாள் அனு. ஐயரும் தமிழில் அர்ச்சனை செய்கிறார். அனுவையே சுந்தரி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதற்கு சாமியைப் பார்த்து வேண்டிக்கோ என அனு சொல்கிறாள்.

ஏதோ பேசத்தான் நம்மள இங்க கூட்டி வந்திருக்காங்க. அவங்கள சமாளிக்குற சக்திய கொடு ஆத்தா என சாமியிடம் வேண்டிக் கொள்கிறாள் சுந்தரி. இவங்க என்கிட்ட நடந்துக்குறதே வித்தியாசமா இருக்கு. பின் சாமி கும்பிட்டுவிட்டு அங்கு ஒரு தூணில் சாய்ந்து அமர்கிறார்கள்.

அங்கு கோவிலுக்கு வரும் குடும்பத்தைக் காட்டி ஏன் சுந்தரி இதுமாதிரி ஹஸ்பண்ட், குழந்தைங்களோட சேர்ந்து கோவில், சினிமா, பீச் என்று போக ஆசை இல்லையா. உன் ஹஸ்பண்ட் ஒத்து வரமாட்டான். நீ பேசாம ஒரு கல்யாணம் பண்ணிக்கோ என்கிறாள் அனு. ஆனால் இப்போதும் ஷாக் ஆகிறாள் சுந்தரி. ஐஏஎஸ் எக்ஸாம் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னியே அப்ப பண்ணிக்கலாமே என்று கேட்கிறாள் அனு.

என் கல்யாணத்த பத்தி இனிமேல் பேச வேண்டாம் மேடம். உங்களுக்கு என் கல்யாணத்துல ஏன் இவ்ளோ ஆர்வம். எனக்குனு ஒரு லட்சியம் இருக்கு. இதுல இப்பதான் கொஞ்ச தூரம் வந்திருக்கேன். என்னால என்ன எப்போதும் பாத்துக்க முடியும் என்று கொஞ்சம் தடாலடியாக பேச ஆரம்பிக்கிறாள்.

சரி வா வீட்டுக்கு போகலாம் என்று அனு சொல்ல, நான் கொஞ்சம் வேலைய முடிச்சிட்டு போறேன் நீங்க கிளம்புங்க மேடம் என்று கூறுகிறாள் சுந்தரி.

முருகன் ஊர்த்தலைவர்களுடன் சந்திக்கிறான். அங்கு அருண் வந்தான் என்று தெரிந்ததும் கோபப்படுகிறார் முருகன். தங்கபாண்டி தோப்புக்குள்ள போயிருப்பானோ என்று சொன்னதும் அவன் எங்கேயும் இல்லை எப்படி தப்பிச்சான்னு தெரியல, இனி வீடு வீடு போயி கதவைத் தான் தட்டணும் என்கிறார்கள்.

முருகன் சுந்தரிக்கு கால் செய்கிறான். அவள் எடுக்கவில்லை என்றதும் மாலினிக்கு அழைத்து எச்சரிக்கிறான். உடனே பாழங்கிணறு அருகே ஒளிந்திருப்பான் அவன் எமகாதகன் போயி பாக்கலாம் வாங்க என முருகன் அனைவரையும் அழைத்துச் செல்கிறான்.

கோவிலில் சுந்தரி, மல்லிகாவை அழைத்து வரச் சொல்கிறாள். அனு மேடம் கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் செய்கிறார் என கோபப்படுகிறாள் சுந்தரி. கல்யாணம்னு கேட்டாளே கொலை பண்ற அளவுக்கு ஆத்திரம் வருகிறது. ஆம்பள தொணை எனக்கு தேவையே இல்ல என்று கூற, மல்லிகா அப்பத்தாவுக்கும் அனுவுக்கும் நடந்த விசயங்களைக் கூறுகிறாள். அப்பத்தாவிடம் சுந்தரியின் கணவர் மொபைல் நம்பரை அனு கேட்க, அதற்கு கார்த்திக்கின் நம்பரைக் கொடுக்க அப்படியே பிரச்னை ஆரம்பமாகிறது என்கிறாள்.

சுந்தரி நாளைய எபிசோட் 

சுந்தரிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் அனு, அனுவிடம் சுந்தரி குறித்து தப்பு தப்பாக சொல்லி வைத்திருக்கும் கார்த்திக், தன் குழந்தை கருவிலேயே அழிய காரணமான கார்த்திக்கை பழி வாங்க துடிக்கும் கிருஷ்ணா என கதை விறுவிறுப்பாக செல்கிறது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News