Sundari உண்மையை உடைக்க அனுவுடன் போட்டிப் போடும் சுந்தரி அம்மா!

அனுவும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் எல்லா உண்மையையும் உடைத்து சுந்தரியின் கணவன் முகத்திரையைக் கிழிக்க முடிவு செய்துள்ளார். அனுவின் அம்மா இதுவிதிப்படி நடக்கட்டும் ஆனால் அனுவுக்கும் வயிற்றில் இருக்கும் வாரிசுவுக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என நினைக்கிறார்.

Update: 2023-04-28 13:32 GMT

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 28th April 2023

கார்த்திக், அனு பிரச்னை கிட்டத்தட்ட குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், சுந்தரியின் கணவன் வேறு, தன் கணவன் கார்த்திக் வேறு என் நினைத்து சுந்தரியிடம் அவள் கணவனின் பித்தலாட்டத்தை நிரூபிக்க நினைக்கிறாள் அனு. சுந்தரிக்கு நல்லது செய்ய வேண்டும் எனவும், அவளுக்கு குழந்தை பிறக்காது என்பது பொய் என்பதை நிரூபிக்கவும் பல திட்டங்களைத் தீட்டுகிறாள் அனு. அதற்கு சித்து, கிருஷ்ணா, அனுவின் நண்பர், இன்னொரு மருத்துவர் என அனைவரும் உதவுகின்றனர். ஒருவழியாக அவளுக்கு குழந்தை பிறக்கும் என்பது தெரியவந்துள்ளது. சுந்தரியின் கணவன் அவளிடம் பொய் கூறியிருக்கிறான் என அனு அனைவருக்கும் சபையில் போட்டு உடைக்க நினைக்கிறாள். அதற்காக திட்டமிட்டு தனக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறாள்.

அதே நேரம் சுந்தரியின் அம்மா இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் வைத்து அனைத்து உண்மையையும் உடைக்க திட்டமிட்டிருக்கிறார்.

அனுவும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் எல்லா உண்மையையும் உடைத்து சுந்தரியின் கணவன் முகத்திரையைக் கிழிக்க முடிவு செய்துள்ளார். அனுவின் அம்மா இதுவிதிப்படி நடக்கட்டும் ஆனால் அனுவுக்கும் வயிற்றில் இருக்கும் வாரிசுவுக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என நினைக்கிறார்.

இந்நிலையில், சுந்தரியிடம் இந்த விழாவுக்கு மாமா, அக்காவைக் கூட்டி வரவேண்டாம் என்று காலில் விழுந்த கதறியிருந்தார் கார்த்தி. இதனை மகிழ்ச்சியாக கிருஷ்ணாவிடம் கூறி செய்து காண்பித்தார். ஆனால் வளைகாப்பு விழாவில் மாட்டிக் கொண்டு உண்மை உடைந்தால் அனுவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என வருத்தப்படுகிறார் சுந்தரி.

சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 27th April 2023

விரைவில் அப்டேட் செய்யப்படும்

சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 29th April 2023

விரைவில் அப்டேட் செய்யப்படும்

Tags:    

Similar News