Sundari சுந்தரி, சித்துவை தப்பாக நினைக்கும் மீனா! அய்யய்யோ!
இரவில் தனியாக பேசிக் கொண்டிருக்கும் சுந்தரி, சித்துவை தப்பாக நினைக்கும் மீனா! அப்ப கல்யாணம் கண்டிப்பா நிக்க போகுது!
சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 19th May 2023
சுந்தரிக்கும் சித்துவுக்கும் இடையில் என்ன உறவு என மீனாவின் அப்பா, அம்மாவுக்கு லைட்டாக சந்தேகம் வருகிறது. இதனைக் கேட்கத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் யாரிடம் கேட்பது எப்படி கேட்பது என தயக்கத்திலேயே இருக்கிறார்கள். கிருஷ்ணாவை அழைத்து தயங்கி தயங்கி கேட்கிறார்கள். சித்துவும் சுந்தரியும் காதலிக்கிறார்களா என்று தயங்கி கேட்டவர்களிடம் முழு கதையையும் சொல்கிறான் கிருஷ்ணா.
சுந்தரி ஐஏஎஸ் படிக்க சென்றது, அங்கே சுந்தரியும் சித்துவும் நண்பர்களானது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தபோது சித்துவுக்கு சுந்தரி மீது இன்டரெஸ்ட் வந்தது. அதை தன் அப்பாவிடம் சொல்ல, அவரோ நேரடியாக சுந்தரியை பொண்ணு கேட்க முருகன் வீட்டுக்கு சென்று அங்கே பிரச்னை ஆனது என தொடர்ந்து கதையைக் கூறினார். போலீஸ் ஸ்டேசனில் இருந்து சண்டைப் போட அங்கேதான் சுந்தரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை அறிந்து கொள்கிறார் சித்துவின் அப்பா. இதனால் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து முருகன் காலில் விழ, இருவரது குடும்பமும் அப்போதிருந்து நட்பு பாராட்டத் தொடங்கிவிட்டது.
சித்துவிடம் சுந்தரி சண்டை போட்டது இனிமேல் தன்னிடம் பேசக்கூடாது என்று சொன்னது, பின் சித்துவின் உண்மையான குணத்தைப் புரிந்துகொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தது என அனைத்தையும் சொல்கிறான் சித்து. இதிலிருந்து மீனாவின் அம்மா, அப்பா இருவரும் உண்மையைப் புரிந்து கொள்கின்றனர். புரிந்துகொண்டதை அடுத்து தங்களுக்கு இப்போது சந்தேகம் விளங்கிவிட்டது. சித்துவுக்கு ஒருவேளை சுந்தரியை பிடித்து நாங்கள் குறுக்கே வந்துவிட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது. அதற்காகத்தான் கேட்டோம் என்று கூற, நீங்களே சொல்லுங்க அப்படி ஒன்னு சித்து மனசுல இருந்தா, சித்துவ கேக்காம அவரு அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவாரா அத சுந்தரியே நடத்தி வைப்பாளா. என் தங்கச்சி அப்படிபட்டவ இல்ல என்று கூறுகிறார்.
இரவு வேளையில் மீனா தன் அறையின் கதவைத் திறந்து பார்க்கிறாள். அங்கே அப்போதுதான் சித்துவுடன் சுந்தரி நின்று பேசிக்கொண்டிருக்கிறாள். இரவு இத்தனை மணி ஆகியும் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று மீனா கடுப்பாகி நிற்கிறாள்.
சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 18th May 2023
மனம் திருந்திய மீனாவின் அப்பா, தன் மகளுக்கும் சித்துவுக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டார். இதனை சித்துவின் அப்பாவிடமே தெரிவித்து விட்டார். தனது தப்புக்கு வருந்தி மன்னிப்பு கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை என சித்துவின் அப்பாவும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். அடுத்து சுந்தரியும், கிருஷ்ணாவும் அப்பத்தாவிடம் கலாட்டா செய்ய, அப்பத்தா இருவரையும் அடிக்க ஓடுகிறார்.
சில நாட்களில் மீனாவின் அப்பாவும் அம்மாவும் மீனாவைக் கூட்டிக் கொண்டு சித்து வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு மீண்டும் மன்னிப்பு கேட்கிறார் மீனாவின் அப்பா. அதற்கு நட்புக்குள் மன்னிப்பும் தேவையில்லை நன்றியும் தேவையில்லை என்கிறார் சித்துவின் அப்பா. அடுத்து திருமணம் பேச்சு எடுக்கிறார்கள். கல்யாணத்துக்கு எல்லா செலவும் நான் தான் பாப்பேன் என்கிறார் மீனாவின் அப்பா. பின் சுந்தரிக்கு இருவரும் நன்றி கூறுகின்றனர்.
மீனாவும் சுந்தரியை அக்கா என்று அழைத்து இந்த கல்யாணம் உங்களாலதான் நடக்குது என்று கூறினார். அதற்கு சுந்தரி நீதான் மா காரணம். உனக்கு ஒன்னு பிடிச்சிருக்குன்னா அத நோக்கி பிரபஞ்சமே நம்மள அழைச்சிட்டு போகும் என்று கூறுகிறார் சுந்தரி. அடுத்து கிருஷ்ணாவும் சுந்தரியை பாராட்டி பேசுகிறான். அடுத்து சுந்தரி தலைமையில் இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என மீனா, அவளின் அப்பா, அம்மா சித்து அனைவரும் கூறுகின்றனர்.
திருமண பத்திரிகை அச்சடித்து வீட்டுக்கு வந்துவிடுகிறது. சுந்தரியும் சித்துவும் திருமண அழைப்பிதழுடன் மல்லிகா மற்றும் அனுவை அழைக்கச் செல்கிறார்கள். சித்துவுக்கு அவங்க மாமா பொண்ணோட கல்யாணம் என கூறி பத்திரிகை வைக்கின்றனர். அழைப்பிதழை வாங்கி பார்த்துக் கொண்டிருக்கும் அனுவிடம் சுந்தரி நீங்க எல்லாரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும் என்று கூறுகிறாள். நான் கண்டிப்பா வரேன் என்கிறாள் அனு. ஆனால் அனுவின் அம்மா நீ கல்யாணத்துக்குலாம் வரவேண்டாம். நான் போயிட்டு வந்துடுறேன் என்று கூறுகிறார்.
அதற்கு அனு என்ன மம்மி, கல்யாணத்துக்கு சந்தோஷமா கூப்பிட வந்தவங்க முன்னாடியே இப்படி சொல்லிட்டீங்க என்று கேட்கிறாள். உடனடியாக சித்து இதை என்னால புரிஞ்சிக்க முடியுது. நீங்க ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க என்று சித்து கூறவும் வெளியிலிருந்து கார்த்தி வருகிறான். அவனையும் திருமணத்துக்கு அழைக்கிறார்கள். அவர்களிடம் நான் வராம எப்படி என்று கூறிவிட்டு, தனியாக சென்று அந்த அழைப்பிதழை எரித்து விடுகிறான் கார்த்தி. அந்த கல்யாணம் நிச்சயமா நடக்காது என்று கொதிக்கிறான்.
அருண் கார்த்திக்கை சந்திக்க விரும்புவதாக கூறி பொது இடம் ஒன்றுக்கு வரச் சொல்லியிருக்கிறான். காரில் வந்து இறங்கும் கார்த்தி அவன் மீது கோபப்படுகிறான். நீங்க சுந்தரி, கிருஷ்ணா கண்ணுல மாட்டிக்க கூடாதுனுதான் இங்க வராதனு சொன்னேன் என்று கூறினார். அப்போது அருண் கோபப்படுகிறான். நீ வேடிக்கைதான் பாத்துக்கிட்டு இருக்க, சுந்தரி நல்லா சந்தோஷமாதான் இருக்கா என்று கோபப்படும் அருணிடம் கல்யாண மண்டபத்துல என்ன நடக்குதுனு மட்டும் பாரு என்று கூறிவிட்டு செல்கிறான் கார்த்திக்.
மீனா பியூட்டி பார்லருக்கு செல்கிறாள் அங்கு தன் மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தன் தோழியிடம் கூறிக் கொண்டிருக்கிறாள். அங்கு பேசியல் முடிந்து மீனா வெளியில் கிளம்பும்போது யாரோ ஒருவர் மேகஸினை மடித்து தன் முகத்தை வெளிப்படுத்திகிறார். அது நம்ம கார்த்திக் தான். அடுத்து கார்த்தி என்ன என்ன ஆட்டம் ஆடப்போறானோ?
சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 20th May 2023
சித்து, மீனா திருமணத்தை நிறுத்தி சுந்தரியை அவமானப்படுத்த நினைக்கிறான் கார்த்தி. இதனை அருணிடமும் கூறிவிட்டு வருகிறான். அடுத்து என்னென்ன நடக்கும் என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.