Sundari சித்துவின் கல்யாணத்தில் கார்த்திக் செய்யும் குழப்பம்!

சுந்தரியின் நண்பன் சித்துவின் கல்யாணத்தில் கார்த்திக் குழப்பம் செய்ய அருணுடன் சேர்ந்து திட்டமிடுகிறான்.

Update: 2023-05-16 04:45 GMT

சுந்தரியின் புத்திசாலித்தனத்தால் தீர்க்கப்பட்டு குடும்பங்கள் ஒன்றாகி, திருமணத்துக்கு சம்மதிக்கிறார்கள். இதில் கார்த்திக் குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறான். அருணுடன் சேர்ந்து திட்டமிடுகிறான்.

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 16th May 2023

மனம் திருந்திய மீனாவின் அப்பா, தன் மகளுக்கும் சித்துவுக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டார். இதனை சித்துவின் அப்பாவிடமே தெரிவித்து விட்டார். தனது தப்புக்கு வருந்தி மன்னிப்பு கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை என சித்துவின் அப்பாவும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். அடுத்து சுந்தரியும், கிருஷ்ணாவும் அப்பத்தாவிடம் கலாட்டா செய்ய, அப்பத்தா இருவரையும் அடிக்க ஓடுகிறார்.

சில நாட்களில் மீனாவின் அப்பாவும் அம்மாவும் மீனாவைக் கூட்டிக் கொண்டு சித்து வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு மீண்டும் மன்னிப்பு கேட்கிறார் மீனாவின் அப்பா. அதற்கு நட்புக்குள் மன்னிப்பும் தேவையில்லை நன்றியும் தேவையில்லை என்கிறார் சித்துவின் அப்பா. அடுத்து திருமணம் பேச்சு எடுக்கிறார்கள். கல்யாணத்துக்கு எல்லா செலவும் நான் தான் பாப்பேன் என்கிறார் மீனாவின் அப்பா. பின் சுந்தரிக்கு இருவரும் நன்றி கூறுகின்றனர்.

மீனாவும் சுந்தரியை அக்கா என்று அழைத்து இந்த கல்யாணம் உங்களாலதான் நடக்குது என்று கூறினார். அதற்கு சுந்தரி நீதான் மா காரணம். உனக்கு ஒன்னு பிடிச்சிருக்குன்னா அத நோக்கி பிரபஞ்சமே நம்மள அழைச்சிட்டு போகும் என்று கூறுகிறார் சுந்தரி. அடுத்து கிருஷ்ணாவும் சுந்தரியை பாராட்டி பேசுகிறான். அடுத்து சுந்தரி தலைமையில் இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என மீனா, அவளின் அப்பா, அம்மா சித்து அனைவரும் கூறுகின்றனர்.

திருமண பத்திரிகை அச்சடித்து வீட்டுக்கு வந்துவிடுகிறது. சுந்தரியும் சித்துவும் திருமண அழைப்பிதழுடன் மல்லிகா மற்றும் அனுவை அழைக்கச் செல்கிறார்கள். சித்துவுக்கு அவங்க மாமா பொண்ணோட கல்யாணம் என கூறி பத்திரிகை வைக்கின்றனர். அழைப்பிதழை வாங்கி பார்த்துக் கொண்டிருக்கும் அனுவிடம் சுந்தரி நீங்க எல்லாரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும் என்று கூறுகிறாள். நான் கண்டிப்பா வரேன் என்கிறாள் அனு. ஆனால் அனுவின் அம்மா நீ கல்யாணத்துக்குலாம் வரவேண்டாம். நான் போயிட்டு வந்துடுறேன் என்று கூறுகிறார்.

அதற்கு அனு என்ன மம்மி, கல்யாணத்துக்கு சந்தோஷமா கூப்பிட வந்தவங்க முன்னாடியே இப்படி சொல்லிட்டீங்க என்று கேட்கிறாள். உடனடியாக சித்து இதை என்னால புரிஞ்சிக்க முடியுது. நீங்க ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க என்று சித்து கூறவும் வெளியிலிருந்து கார்த்தி வருகிறான். அவனையும் திருமணத்துக்கு அழைக்கிறார்கள். அவர்களிடம் நான் வராம எப்படி என்று கூறிவிட்டு, தனியாக சென்று அந்த அழைப்பிதழை எரித்து விடுகிறான் கார்த்தி. அந்த கல்யாணம் நிச்சயமா நடக்காது என்று கொதிக்கிறான்.

அருண் கார்த்திக்கை சந்திக்க விரும்புவதாக கூறி பொது இடம் ஒன்றுக்கு வரச் சொல்லியிருக்கிறான். காரில் வந்து இறங்கும் கார்த்தி அவன் மீது கோபப்படுகிறான். நீங்க சுந்தரி, கிருஷ்ணா கண்ணுல மாட்டிக்க கூடாதுனுதான் இங்க வராதனு சொன்னேன் என்று கூறினார். அப்போது அருண் கோபப்படுகிறான். நீ வேடிக்கைதான் பாத்துக்கிட்டு இருக்க, சுந்தரி நல்லா சந்தோஷமாதான் இருக்கா என்று கோபப்படும் அருணிடம் கல்யாண மண்டபத்துல என்ன நடக்குதுனு மட்டும் பாரு என்று கூறிவிட்டு செல்கிறான் கார்த்திக்.

மீனா பியூட்டி பார்லருக்கு செல்கிறாள் அங்கு தன் மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தன் தோழியிடம் கூறிக் கொண்டிருக்கிறாள். அங்கு பேசியல் முடிந்து மீனா வெளியில் கிளம்பும்போது யாரோ ஒருவர் மேகஸினை மடித்து தன் முகத்தை வெளிப்படுத்திகிறார். அது நம்ம கார்த்திக் தான். அடுத்து கார்த்தி என்ன என்ன ஆட்டம் ஆடப்போறானோ?

சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 15th May 2023

சுந்தரி மல்லிகாவை சித்துவுடன் அனுப்பி அவனது அத்தை வீட்டில் பேச வைக்கிறாள். அங்கு சித்து வருவதற்கு முன்னர் தாயும் மகளும் சீவி சிங்காரித்து புறப்படுகின்றனர். அதனை உணர்ந்த சித்துவின் மாமா யார் வரப் போகிறார்கள் என்று கேட்ட நிலையில் மல்லிகாவும் அவருடன் சித்துவும் வருகிறார்.

மாமா கோபத்தில் திட்டி சித்துவை அனுப்பி விடுகிறார். தனக்கும் உங்க அப்பனுக்கும் உள்ள பிரச்னை தீராதது என்று கூறுகிறார். இதனிடையே சித்துவின் அப்பாவிடம் வந்து கதையைக் கேட்கிறார்கள். சுந்தரி எப்படியாவது இவர்களைச் சேர்த்து வைப்பதாக கூறுகிறாள். சித்துவின் அப்பாவும் அவரது மாமாவும் பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்துக்கிட்டவங்க. சித்துவின் அப்பா போலிஸ் அதிகாரியாக இருக்கிறார். மாமா பிசினஸ் மேன். அவரும் அவருடைய நண்பரும் சேர்ந்து ஆரம்பித்த பிசினஸில் நஷ்டம் ஏற்பட, பிரச்னையாகி பொதுமக்கள் அடித்துக் கொல்ல நினைக்கும் ஆளாகி விடுகிறார் மாமா. இதனால் அவரைக் காப்பாற்றவும் தனது கடமையைச் செய்யவும் அவரை கைது செய்துவிடுகிறார் சித்துவின் அப்பா.

இதனால் தன் மானம் போனது என சித்துவின் அப்பாவை எதிரியாக பார்க்கிறார் சித்துவின் மாமா. இதனிடையே எப்படியாவது இந்த பிரச்னையை சமாளித்து இரு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க நினைக்கிறார் சுந்தரி.

அப்பத்தாவும் கிருஷ்ணாவும் நாடகம் ஆடி மீனா வீட்டுக்குள் நுழைகின்றனர். அப்பத்தா தன்னை தன் மகன் வெட்ட வருவதாக கூறி மீனா அப்பாவிடம் சொல்கிறார். அப்பத்தாவை காக்க மீனாவின் அப்பா ரௌடி வேடமிட்டு வந்த கிருஷ்ணாவை மிரட்டுகிறார். இதனால் பயந்து போனதாக நாடகமாடும் கிருஷ்ணா ஓடி விடுகிறார். இதனையடுத்து போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என மீனாவின் அப்பா கூற அதனை வேண்டாம் என்று அப்பத்தா சொல்லிவிட்டு வெளியில் வந்துவிடுகிறார்.

ரௌடி வேடமிட்ட கிருஷ்ணா நேராக சென்று ஒரு காரில் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் கீற அங்கிருந்து சுந்தரி வருகிறாள். அவளிடம் தன் நடிப்பு எப்படி என்று கேட்க அருமை என்று பாராட்டுகிறாள். அடுத்து அப்பத்தாவை எங்கே என்று கேட்கிறாள். அதோ வருது பாரு கிழவி என்று திரும்பி பார்க்கிறான் கிருஷ்ணா. அப்போது அங்கிருந்து அப்பத்தா ஓடி வருகிறாள். கோபத்துடன் வந்த அப்பத்தா கிருஷ்ணாவை பொள பொள வென்று பொளக்கிறார். குறுக்கிட்ட சுந்தரி ஏன் அண்ணன அடிக்கிறீங்க அப்பத்தா என்று கேட்க, அவர் கிருஷ்ணா என்னை வார்த்தைக்கு வார்த்தை கிழவி என்று கூறிவிட்டதாக சொல்கிறார்.

இந்த பக்கம் சுந்தரி சித்து வீட்டுக்கு வருகிறார். அங்கு கிருஷ்ணா, மாலினியும் இருக்கிறார்கள். சித்துவின் அப்பாவை வாங்க வாங்க போகலாம் அவரைப் போய் சந்திக்கலாம் என்று கூறுகிறாள். கிளம்புங்க அங்கிள் என்றதும் சித்துவின் அப்பா வர மறுக்கிறார். எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லம்மா என்று கூறுகிறார். மீனாவுடைய அப்பா மனச நான் மாத்துறேன் என்று கூறுகிறாள்.

உங்க அண்ணன் பண்ணத மறந்துருவேன் மன்னிச்சிருவேன்னு கனவுல கூட நினைக்காத என்று மனைவியை மிரட்டுகிறார் சித்துவின் பிசினஸ் மேன் மாமா. இதனால் அவரது மனைவியும் மகளும் மிரண்டு போய் நிற்கின்றனர். என்ன அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டவன். இவன் என்ன தைரியத்துல வீடேறி வந்திருக்கான். இவன் உனக்கு அண்ணனே இல்ல. அப்படி அண்ணன்தான் முக்கியம்னா இந்த வீட்ல உனக்கு இடம் இல்ல.

என்ன அவமானப்படுத்தி அசிங்கப்படுத்துனவனுக்கு என் வீட்ல இம்மி அளவு கூட இடம் இல்ல. டேய் உனக்கு மானம், சூடு, சொரணை எதுவும் இல்லயா என கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள நினைக்கிறார் மாமா. உடனே சுந்தரி குறுக்கிட்டு பேசுகிறார்.

என் பாட்டிய உள்ள வச்சி என்ன பாடு படுத்துனீங்க என்று கேட்கிறாள் சுந்தரி. அப்போது குறுக்கிட்டு பேசும் மீனாவின் அப்பா, ஏம்மா உனக்கு என்ன நடந்துதுனு தெரியாது தெரியாம பேசாது. நான் மட்டும் உன் பாட்டிய வீட்ட விட்டு வெளிய அனுப்பிருந்தா அந்த ரௌடி பய உன் பாட்டிய கொன்னே போட்ருப்பான். நான்தான் காப்பாத்துனேன். அவங்கள காப்பாத்ததான் அப்படி பண்ணேன் என்கிறார்.

உடனே சுந்தரி, இதுதான் சித்து அப்பாவும் செஞ்சார். அன்னைக்கு சிட் பண்ட்ல பணத்த போட்ட ஊர் மக்கள் கொதிச்செழுந்து ஆஃபீஸ அடிச்ச ஒடைக்குறப்ப அங்கிள் மட்டும் உங்கள அரெஸ்ட் பண்ணா இருந்திருந்தா உங்க உயிருக்கே உத்தரவாதம் இருந்துருக்காது என்று கூறுகிறாள். இப்ப சொல்லுங்க யார் மேல தப்பு என்று கூறுகிறாள். இப்போது மீனாவின் அம்மாவும் ஒரு உண்மையைக் கூறுகிறார்.

நீங்க கிட்னி பிரச்னையால உடம்புக்கு முடியாம இருந்தப்ப அண்ணி தான் கிட்னி டொனேட் பண்ணாங்க என்று கூறியதும் அப்படியே ஷாக் ஆகி விழுந்துவிடுகிறார் மீனாவின் அப்பா. இதனால் மனம் திருந்தியவர் அவர்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார். 

சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 17th May 2023

கார்த்தி, அனுவுக்கும் சுந்தரிக்கும் துரோகம் செய்ததை அறிந்த அனுவின் உயிர் தோழன் சிவா, கார்த்தியை தண்டிக்கப்போவதாக கூறுகிறார். இதனால் அடுத்து என்னென்ன நடக்கப்போகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம். 

Tags:    

Similar News