Sundari இன்றைய எபிசோட் ஜூன் 15, 2023

நாளை ஐஏஎஸ் தேர்வு.. எழுதுவாரா சுந்தரி?

Update: 2023-06-14 13:41 GMT

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 15th June 2023

விரைவில் அப்டேட் செய்யப்படும்

சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 13th June 2023

சுந்தரிதான் குழந்தையைக் கடத்தியிருக்கிறாள் என்று நினைத்து போலீஸ் சுந்தரியை அரெஸ்ட் செய்து எஃப் ஐ ஆர் பதிவிடாமல் வைத்திருக்கிறது. அந்த இடத்துக்கு வந்த வில்லன் தன் குழந்தையைக் கடத்தியதை இவள் ஒப்புக் கொண்டாளா குழந்தையை எங்கே யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறாள் என்று கேட்டு மிரட்ட , போலீஸே அவனுக்கு பயப்படுகிறது. இதனையடுத்து அவள் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று தனது புராணத்தைப் பாடுகிறாள். திரும்ப திரும்ப இதையேத் தான் சொல்கிறாள் என்றதும் அவளை தன் வீட்டுக்கு தூக்கிச் செல்கிறான் வில்லன். போலீஸ் தடுத்து பார்த்தும் அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை.

வில்லனின் வீட்டில் சுந்தரியை அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள். ஏற்கனவே அவரது மனைவி வந்து கேட்டும் இவள் தான் எந்த தப்பும் செய்யல என்று அப்பாவியாக கூறுகிறாள். தான் வந்த போது பேரிகார்டர் இருந்தது. அதனால் காரில் இருந்து இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தேன். அந்த நேரம் ஒரு பெண் என்னிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு தனக்கு அர்ஜென்ட்டாக ஓய்வறை செல்லவேண்டும் என்று கேட்டதால் அந்த இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழி இல்லாமல் குழந்தையைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் கொஞ்ச நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. குழந்தையை எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேசன் சென்றேன்.

அங்கு ரைட்டரிடம் பேசினேன். எஸ்ஐ இங்கே இல்லை எனவும் கொஞ்ச நேரம் தன்னிடம் வைத்துக் கொண்டு பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வீட்டுக்கு கொண்டு வந்த நிலையில் ஒரு பாட்டி, போலீஸுடன் வந்து குழந்தையைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். அப்போதுதான் தனக்கு புரிந்தது இது குழந்தையைக் கடத்தும் வேலை என்பது. நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று கூறி அழ, வில்லனின் மனைவி இவளின் நிலையைக் கண்டு வருந்துகிறார்.

வில்லனுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் தன் மனைவி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இவளை விடுதலை செய்ய சொல்கிறான். அதைக் கேட்ட அடியாள் ஒருவன் யாருக்கோ ஃபோன் செய்கிறான். அது சுந்தரி ஏற்கனவே காவல்துறை ரைட்டர் என நினைத்து சென்ற நபர். அவரோ ஒரு திட்டத்தைத் தீட்டி அடியாளிடம் சொல்ல, அதன்படி நடக்கிறான் அடியாள்.

உன்னைப் பார்த்தால் தன் தங்கை போல இருப்பதாகவும், நீ என்ன சொன்னாலும் இவங்க நம்ப மாட்டாங்க கொன்னுடுவாங்க, குழந்தை கிடைச்சாலும் கிடைக்கலனாலும் கொன்னுடுவாங்க என சுந்தரியிடம் பேசி அவளை தப்பித்து போக சொல்கிறான். இதைக் கேட்ட சுந்தரி இதுதான் ஒரே வழி என நினைத்து தப்பிச் செல்கிறாள். உடனடியாக அந்தர் பல்டி அடித்த அடியாள் சுந்தரி தப்பித்து போவதாக கத்தி கூப்பாடு போடுகிறான்.

இவள் ஏன் தப்பித்து போக வேண்டும் அப்போது அவள்தான் குற்றவாளி.. அவளை பிடிங்க என்று வில்லன் உத்தரவு போடுகிறான்.

இந்த பக்கம் முருகன் தன் மொபைலைக் காணவில்லை என்று தேடுகிறான். அவன் மனைவி மௌன விரதம் இருக்கிறாள். இருவரும் பேசிக் கொண்டாலும் மொபைலைக் காணவில்லை என்றும் பிறகு தேடி எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்கின்றனர்.

அதே நேரம் கார்த்தியிடம் அருண் தான் போட்ட திட்டத்தை கூறுகிறான்.. பேரிகார்டர், இறக்கி விட்டு போனியே அப்றம் ஒரு பெண் வந்து சுந்தரிக்கிட்ட குழந்தையைக் கொடுத்துட்டு போனா என்று அனைத்தும் தன் திட்டம் எனக் கூறுகிறான்.

அங்கு தென்காசியில் வில்லன் சுந்தரியைத் தேடி ஓடிகிறான். வில்லன்களிடமிருந்து தப்பித்து ஓடி ரோட்டுக்கு வருகிறாள் சுந்தரி.

சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 15th June 2023

குழந்தையைக் கடத்திய வழக்கில் சிக்கியுள்ள சுந்தரிக்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறாள். அவளை வசமாக சிக்க வைத்தது யார் என்பதைக் கண்டறிந்து அதிலிருந்து வெளியே வந்து தன்னுடைய கனவு லட்சியமான ஐஏஎஸ் தேர்வை சரியாக எழுதி முடிப்பாரா சுந்தரி?

Tags:    

Similar News