Sundari அனுவுக்கு டெலிவரி! ஆனால் இப்படி ஒரு சிக்கல்!

அனுவுக்கு டெலிவரி ஆவதில் மிக முக்கியமான தகவல் ஒன்றை சிவா, அனுவின் அம்மா மல்லிகாவிடம் தெரிவிக்கிறார். இதனால் மொத்த குடும்பமும் கலங்கி நிற்கிறது.

Update: 2023-05-10 09:45 GMT

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 10th May 2023

சுந்தரி ஹஸ்பண்ட் தப்பானவன்னு சொன்னா அத கார்த்திக் ஒத்துக்கமாட்டேங்குறாரு அனு என்று போட்டுக் கொடுக்கிறார் அனுவின் தோழன் சிவா. இதனால் கடுப்பான அனு அந்த ஃபிராட நல்லவன்னு சொல்றியா? என்று கோபப்பட்டு கார்த்திக்கிடம் கேட்கிறாள். இப்போது சூழ்ச்சியைப் புரிந்து கொள்கிறான் கார்த்திக். அங்கே சிவாவும், சுந்தரியும் கேலியாக சிரித்துக் கொண்டு நிற்கிறார்கள்.

அனுவுக்கு டெலிவரி தேதியும் நெருங்கி வருகிறது. ஆனால் அவளுக்கு டெலிவரி ஆவதில் கொஞ்சம் காம்ப்ளிகேஷன் இருக்கிறது என்று சிவா தெரிவிக்கிறார். இதனால் அனுவின் அம்மா மல்லிகா கலங்குகிறார். அனு அதுலாம் ஒன்னும் இருக்காது நாம பாத்துக்கலாம் என்கிறார் சுந்தரி.

சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 9th May 2023

வீட்டில் கார்த்திக் அப்பத்தாவிடம் சுந்தரியை தன்னுடன் வெளியில் வரச் சொல்லுமாறு கேட்கிறான். அப்போது சுந்தரி வீட்டில் இல்லை. அதனால் அப்பத்தாவிடம் அவன் சுந்தரி பற்றி பேசி மயக்கி, அப்பத்தாவை கைக்குள் போட முயற்சிக்க, அருகிலிருந்த கார்த்திக்கின் அக்கா மகள் அவனை முறைத்துக் கொண்டே இருக்கிறாள். அந்த நேரம் பார்த்து சுந்தரி அங்கு வருகிறாள். இடையில் கார்த்திக் தன்னை மாமா என்று சுந்தரி அழைக்க வேண்டும் என்று கேட்கிறான். அப்பத்தாவும் சுந்தரியைக் கட்டாயப்படுத்த அவளும் வேண்டா விருப்பாக மாமா என்கிறாள். அதன்பின்னர் அப்பத்தா சுந்தரியை கார்த்திக்குடன் போக சொல்கிறார்.

சுந்தரி தனக்கு வேலை இருப்பதாகவும் அதனால் போக முடியாது என்றும் கூற, அப்பத்தா அவளைக் கட்டாயப்படுத்தி தானும் உடன் செல்கிறார். அப்போது அவர்கள் மால் ஒன்றுக்கு செல்கிறார்கள். அங்கு மாமா இப்பதான கூட்டியாந்திருக்காரு அவர ஒரு வழி பண்ணிட வேண்டியதுதான் என்கிறாள் சுந்தரி. கொஞ்ச நேரத்தில் அப்பத்தாவிடம் சுந்தரி மாமா இப்படித்தான் பேசிட்டு இருப்பாரு ஆனா நமக்கிட்ட சொல்லாமலே விட்டுட்டு ஓடிடுவாரு. இப்படி பல தடவை நடந்துருக்கு கைய நல்லா புடிச்சி வை என்று சொல்கிறாள். அப்பத்தாவும் மிகவும் கண்டிப்பாக இந்த முறை எங்கயும் போகமாட்டாரு என கையைப் பிடித்துக் கொண்டே நிற்கிறார்.

சுந்தரி சிவாவுக்கு கூப்பிட்டு சொல்லிவிட்டாள். சிவாவும் ஒரு திட்டம் போட்டு அவளை அதே கடைக்கு அழைத்து வந்திருக்கிறார். இதனால் சுந்தரி கார்த்திக்கிடம் தான்தான் அவர்களை வரவழைத்தேன் என்று கூறி சிரிக்கிறாள். இதனால் பயந்து போன கார்த்திக் அனுவுக்கு இது தெரிந்துவிடக் கூடாது என அடித்து பிடித்து ஓடுகிறான். பின் கார்த்திக் எங்கே என கடுப்பில் இருக்கிறார் அப்பத்தா. சொன்னபடி கார்த்திக் அவர்களை விட்டுவிட்டு சென்று விடுகிறான்.

சுந்தரியும் அப்பத்தாவும் அம்போ என கடையில் நிற்க வைத்துவிட்டு ஓடியதால் கடுமையாக கோபப்படுகிறார் அப்பத்தா. அவரு வரட்டும் நான் பேசிக்கிறேன் என்கிறாள் சுந்தரி. இதுகுறித்து அவளுடைய தோழி மாலினியிடம் நடந்ததைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறாள் சுந்தரி.

இதனிடையே அங்கு அனு வீட்டுக்கு கார்த்திக் வருகிறான். அங்கே ஏற்கனவே சுந்தரியும், சிவாவும் இருக்கிறார்கள். அனுவின் உயிர்த் தோழன் சிவா சில ஃபோட்டோக்களைக் காட்டி கார்த்திக்கிடம் இதில் யாரு அனுவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கேட்கிறார். அதற்கு கார்த்திக் அவங்கள எதுக்கு அனுவுக்கு பிடிக்கணும் என்று கேட்கிறார்.

சிவாவோ அவங்க எல்லாரும் அனுவுக்காக பார்த்துருக்க மாப்பிள்ளைங்க. இவங்கள்ல ஒருத்தரத் தான் அனுவுக்காக மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கோம்னு சொல்ல கார்த்திக் கோபப்பட்டு சிவாவின் சட்டையைப் பிடிக்கிறான். அங்கிருந்து அனு மெல்ல அந்த இடத்துக்குள் வருகிறாள்.

சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 11th May 2023

கார்த்தி, அனுவுக்கும் சுந்தரிக்கும் துரோகம் செய்ததை அறிந்த அனுவின் உயிர் தோழன் சிவா, கார்த்தியை தண்டிக்கப்போவதாக கூறுகிறார். இதனால் அடுத்து என்னென்ன நடக்கப்போகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம். 

Tags:    

Similar News