சரியாக மாட்டிக்கொண்ட சுந்தரி! அப்போ ஐஏஎஸ் கனவு அம்பேலா? என்ன நடந்துச்சு பாருங்க!
கடைசியில் டிவிஸ்ட் வந்து சேருகிறது. அந்த குழந்தையைக் கடத்தியதே சுந்தரிதான் என டிவிஸ்ட் வைத்து போலீஸ் அவளை அரெஸ்ட் செய்து செல்கிறது.
கைக்குழந்தையைத் திருடிக் கொண்டு ஒருத்தி சுந்தரியிடம் கொடுத்துவிட்டு போக, இதனால் சுந்தரிக்கு பாதிப்பு ஏற்படும் என நினைக்கும்போது கடைசியில் டிவிஸ்ட் வந்து சேருகிறது. அந்த குழந்தையைக் கடத்தியதே சுந்தரிதான் என டிவிஸ்ட் வைத்து போலீஸ் அவளை அரெஸ்ட் செய்து செல்கிறது.
சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 10th June 2023
குழந்தையைக் கடத்தி சென்றதே போலீஸ் ரூபத்தில் வந்த அவரும், அவருடன் வந்த பாட்டியும்தான் என்பதை அறிந்து கடகடவென ஓடிச் சென்று பார்க்கிறாள் சுந்தரி. ஆனாலும் சரியான நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட சுந்தரி என்ன செய்வது என தவித்து வருகிறாள்.
அந்த நேரத்தில் அங்கு உண்மையான போலீஸ் வருகிறது. வந்ததும் அவர்களிடம் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, போலீசிடமும் கெட்ட பெயர் வாங்குகிறார். அவர்கள் அழைத்து வந்த ஆட்டோ காரர் கடைசி நேரத்தில் காலை வாரி விட, சுந்தரியை தான் மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்து இங்கே விட்டதாகவும் கூறுகிறார்.
ஆனால் இது உண்மையில்லை என்று சுந்தரி எத்தனையோ முறை சொல்லியும் போலீஸ் இவளை நம்பவில்லை. அடுத்து தான் இங்கே ஐஏஎஸ் தேர்வு எழுத வந்திருக்கிறோம் என்று கூறுகிறாள்.
அந்த நேரத்தில் இந்த கெஸ்ட் ஹவுஸின் பாதுகாவலராக ஒருவர் இருக்கிறார். அவருடன் அவர் மனைவியும் இருக்கிறார் என்று கூற போலீஸ் அவர்களும் இங்கே இருக்கிறார்களா என்று கேட்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த அவர்கள் சுந்தரியை தனக்கு யார் என்றே தெரியாது என்று கூற அதிர்ச்சியடைகிறாள் சுந்தரி.
இதனைத் தொடர்ந்து தான் மல்லிகா மேடம் சொல்லியனுப்பிதான் இங்கே வந்தேன் அவரது நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று போலீசிடம் கெஞ்ச, அவர்களோ சரி என அவர்களையும் தொடர்பு கொள்கிறார். மொபைல் சுவிட்ச்டு ஆஃப் என வர, அடுத்து அனுவுக்கும், அதனைத் தொடர்ந்து கார்த்திக்கும் கால் செய்ய சுவிட்ச்டு ஆப் என வருகிறது.
கடைசியாக முருகன் மாமாவுக்கு கால் செய்ய சொல்ல சுந்தரியைக் கடுமையாக சாடுகிறார் போலீஸ். அவளை கைது செய்து அழைத்து செல்கையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் போலீஸ் சுந்தரியை வேனில் அழைத்துச் செல்கிறது.
சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 9th June 2023
சுந்தரியிடம் கிடைத்த கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேசனுக்கு செல்கிறாள் சுந்தரி. அங்கு பெண் காவலர் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வைக்கின்றனர். அந்த நேரத்தில் குழந்தை பசியால் அழுகிறது. இதனை மனம் ஏற்காமல் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு குழந்தையை எடுத்துச் சென்று நேரம் கழித்து போலிசிடம் தர நினைக்கிறார் சுந்தரி.
ஆட்டோ காரர் ஒருவரிடம் நடந்ததைக் கூறி குழந்தையையும் தன்னையும் தான் தங்கியிருக்கும் வீட்டில் இறக்கி விட்டுவிடும்படி கேட்கிறார். ஆனால் போலீஸ் விசயம், இந்த குழந்தை கடத்தப்பட்ட குழந்தை என்று கூறி ஆட்டோகாரர் தன்னுடன் அழைத்துச் செல்ல மறுக்கிறார். தான் பிள்ளைக்குட்டி காரன் எனவும் தனக்கு போலீஸால் பிரச்னை வந்துவிடக் கூடாது எனவும் பயப்படுகிறார் ஆட்டோ காரர்.
சுந்தரியும் தான் நடந்தே செல்வதாக கூற, கொஞ்சம் யோசித்துவிட்டு மனசு கேட்காமல் தானே கொண்டு போய் விடுவதாக கூறி அங்கு கொண்டு சென்று விடுகிறார் ஆட்டோகாரர். பின் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் கணவன் மனைவி இருவரும் வருகிறார்கள். இவர்கள் சமையலுக்கு உதவி செய்வார்கள் என்று தனது மனைவியையும் அறிமுகப்படுத்திவிட்டு உள்ளே செல்ல, சற்று நேரத்தில் போலீஸ் வருகிறது.
குழந்தையைத் தேடி போலீஸும், குழந்தையின் பாட்டியும் வருகிறார்கள். பாட்டி பரிதவித்துக் கொண்டு தன் பேரனைக் காண வருகிறாள். அழுது புலம்பி தன் பேரனை தன்னிடம் காட்டுங்கள். தன் குல விளக்கு, தங்கள் குடும்ப வாரிசு என அழுதுகொண்டே குழந்தையைக் கடத்திட்டு போனவ நல்லா இருக்க மாட்டா என சாபமிடுகிறாள். அடுத்து போலீஸும் சமாதானப்படுத்தி குழந்தையை எடுத்துச் செல்கின்றனர். பாட்டியும் சுந்திரிக்கு நன்றி தெரிவித்து விட்டு செல்கிறாள். போலீஸ் இவர் ஐஏஎஸ் தேர்வு எழுத வந்திருப்பதை அறிந்து பாராட்டிவிட்டு செல்கிறார்.
உள்ளே சென்று அமர்ந்த சுந்தரியிடம் சாப்பிட என்ன செய்ய நான் வெஜ்ஜா, வெஜ்ஜா என்று கேட்கிறார் அந்த அண்ணன். அந்த நேரத்தில் சுந்தரிக்கு ஒரு சிந்தனை வருகிறது. அது குழந்தையைப் பற்றியது. குழந்தை பெண் குழந்தை என்பதை உணர்ந்த சுந்தரி, வந்த பாட்டி அது ஆண்குழந்தை என ஒப்பாறி வைத்தாரே என்பது தொடங்குது சந்தோகம். டுவிஸ்ட்டு.. அது பெண் குழந்தை. இப்போது போலீசுடன் வந்த பாட்டிதான் குழந்தையைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள்.
சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 12th June 2023
குழந்தையைக் கடத்திய வழக்கில் சிக்கியுள்ள சுந்தரிக்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறாள். அவளை வசமாக சிக்க வைத்தது யார் என்பதைக் கண்டறிந்து அதிலிருந்து வெளியே வந்து தன்னுடைய கனவு லட்சியமான ஐஏஎஸ் தேர்வை சரியாக எழுதி முடிப்பாரா சுந்தரி?