சுந்தரியைப் பற்றிய உண்மை! போட்டுடைத்த கார்த்திக்.. மயங்கி விழுந்த அப்பா!
கார்த்திக்கின் அப்பா ஏதேதோ திட்டமிட்டு கார்த்திக்கையும் அவனது காதலி அனுவையும் அவள் அம்மாவையும் கோவிலுக்கு வரவழைக்கிறார்.
இரண்டு மனைவிகளை வைத்துக் கொண்டு அல்லல்படும் வழக்கமான கதைதான் என்றாலும் கொஞ்சம் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது சுந்தரி சீரியல். சுந்தரிதான் நாயகி. அவளுக்கு ஆசைப்பட்ட எதுவும் கிடைத்தே இல்லை. நல்ல குடும்பத்தை தவிர. தனக்கு நன்கு தெரிந்த தோழியின் அம்மாவின் தம்பியை, மாமா முருகன் சொன்னதற்காக திருமணம் செய்து கொண்டாள் சுந்தரி. ஆனால் கார்த்திக்கு இதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. மாமா சொன்ன ஒரே காரணம்தான்.
கார்த்தி ஏற்கனவே சென்னையில் ஒரு பெண்ணை காதலித்து வருகிறான். அவள் பெரிய கம்பெனியின் முதலாளி, பேரழகி அடுமட்டுமின்றி கார்த்திக் பல ஆண்டுகளாக காதலிக்கிறான். அவளை திருமணம் செய்துகொண்டு இப்போது தந்தையும் ஆகிவிட்டான். சில மாதங்களில் குழந்தையும் பிறக்கப் போகிறது.
கார்த்திக்கு இன்னொரு மனைவி இருப்பது அவன் நண்பன் கிருஷ்ணாவுக்கும், சுந்தரிக்கும், சுந்தரியின் தோழன் கிரிஷ்க்கும் என தொடங்கி படிப்படியே அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இப்போது கார்த்திக்கை பற்றி இதுவரை தெரிந்துகொள்ளாமல் இருப்பது அவரின் முருகன் மாமா, சுந்தரியின் தாய், பெரியாத்தாவுக்கும் தெரியவில்லை.
இன்றைய எபிசோட்
கார்த்திக்கின் அப்பா ஏதேதோ திட்டமிட்டு கார்த்திக்கையும் அவனது காதலி அனுவையும் அவள் அம்மாவையும் கோவிலுக்கு வரவழைக்கிறார். கூடவே தன்னுடைய மருமகள் சுந்தரி உட்பட குடும்பத்தினர் அனைவரையும் கோவிலுக்கு வரவழைக்கிறார். இப்படி ஒரு சிக்கல் இருப்பது தெரியாமல் கார்த்திக்கும் கோவிலுக்கு அனு, அவள் அம்மாவுடன் வந்து சேர்கிறான்.
கார்த்திக்கிடம் அவனது அப்பா எனக்கு சுந்தரி மட்டும்தான் மருமகள் என கோபப்படுகிறார். அவ பெத்துக் குடுக்குற கொழந்த மட்டும்தான் என் குடும்ப வாரிசு என்று கூறுகிறார்.
சுந்தரிக்கு குழந்தை பிறக்காது என்கிறான் கார்த்திக். அப்படி எதுவும் இருக்காது என்று கூறியபடியே மயங்கி விழுகிறார் கார்த்திக்கின் அப்பா. உடனே முருகன் மாமாவும், சுந்தரியும், கார்த்திக்கும் அப்பாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை செல்கிறார்கள். முருகன் மாமாவுக்கு எப்படி இப்படி ஆச்சு என்று கேட்கிறார்.