தனுஷ் பட தலைப்பில் புதிய சீரியல்...! தூக்கியடிக்கப்படும் சுந்தரி..! என்னாச்சு?
புதிய சீரியலை ஒளிபரப்ப சுந்தரி சீரியலை தூக்கியடிக்க திட்டமிடுகிறதா சன்டிவி!;
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் சுந்தரி. பிரைம் டைமின் முதல் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சமீப நாட்களில் அதிக டிஆர்பி கொடுக்காமல் இருப்பதால் அந்த சீரியலை தூக்கி அடிக்க திட்டமிட்டுள்ளனராம் சன்டிவி.
தமிழ் மக்களின் ஆஸ்தான சீரியல்களில் ஒன்று சுந்தரி. சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் சரியாக இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. முதல் பகுதி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து இரண்டாவது பகுதியையும் ஒளிபரப்பி வருகிறது. இந்த சீரியலுக்கு தமிழ் மக்கள் அமோக ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். சுந்தரி தற்போது கலக்டராகி, அநியாயங்களைத் தட்டி கேட்கிறார். சுந்தரியின் முக்கிய எதிரியாக ஒரு கீழ்நிலை அரசியல்வாதி கட்டப்பஞ்சாயத்து, அடிதடிகளை செய்து வருகிறான். சட்டங்களை மீறி பல விசயங்களைச் செய்வதால் அவனை நேரடியாக எதிர்க்கிறாள் சுந்தரி.
இந்த எதிர்ப்பால் சுந்தரிக்கு நிகழும் பாதிப்புகளும், அந்த பாதிப்புகளை கடந்து எப்படியெல்லாம் சமாளிக்கிறாள் மாவட்ட ஆட்சியராக என்னவெல்லாம் செய்கிறார் என்பதே இந்த தொடரின் ஹைலைட்ஸ்.
இந்நிலையில், இந்த சீரியலின் விறுவிறுப்பு சற்று குறைந்துள்ள நிலையில், மக்களின் ஆர்வம் குறைவதற்குள் இந்த சீரியலை நிறுத்திவிடுவது என யோசிக்கிறார்கள் போல. அல்லது இந்த தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் புதிய தொடரை ஒளிபரப்பி, அடுத்து சுந்தரியை வேறு ஸ்லாட்டுக்கு மாத்தி விடலாம் என்றும் யோசனை இருக்கிறதாம். ஒருவேளை இரவு 7 மணிக்கு புதிய தொடர் வந்தால், அது என்ன தொடராக இருக்கும் என மக்களிடையே இப்போதே பேச்சு எழுந்து வருகிறது.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தின் பெயரில் புதிய சீரியல் ஒன்று அறிமுகமாகவுள்ளது. அதில் ஹீரோயினாக அன்பே வா, சீரியலில் பூமிகாவாக நடித்து அசத்திய டெல்னா டெவிஸ் மீண்டும் வர இருக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அறிமுகமாக இருக்கிறார்.
தொடங்கிய நிலையிலேயே முடிவடையும் தொடர் எனும் மோசமான சாதனையை பெற இருக்கும் சன்டிவி தொடர் பற்றியும் ரசிகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். அதாவது சன்டிவியில் 12.30 மணிக்கு இதுவரை ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா தொடர் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த அளவுக்கு அதனை இழுத்ததே பெரிய விசயம் என்கிறார்கள். புதிய கோணம் என மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான சண்டையையே கொஞ்சம் வித்தியாசமாக காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அது சரியாக அமையவில்லை.
தொடர் சரியான பாதையில் நகராமல் வழக்கமான காட்சிகளுடன் மக்களை போரடிக்கச் செய்கின்றன. இதனால் சன்டிவியே இந்த தொடரை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஜூலையுடன் இந்த தொடரை முடித்துவிட்டு புதிய தொடரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆடுகளம் எனும் புதிய தொடரை நிச்சயமாக மதிய வேளைகளில் இடமாட்டார்கள். அநேகமாக மணமகளே வா எனும் தொடர்தான் மதியம் 12.30 மணிக்கு வரவிருக்கிறது என ரசிகர்கள் யூகித்துள்ளனர்.
7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக ஆடுகளம் தொடரை ஒளிபரப்ப திட்டமா, அல்லது, 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடரை நிறுத்திவிட்டு அந்த ஸ்லாட்டில் சுந்தரியை ஒளிபரப்பத் திட்டமா என்பது விரைவில் தெரியவரும். ஒருவேளை அதுதான் திட்டமென்றால், மணமகளே வா தொடரை எந்த சீரியலுக்கு பதிலாக ஒளிபரப்ப இருக்கிறார்கள் என்பதும் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.