4 ஆண்டுகளாக அடுத்தடுத்து தோல்வி.. விஜய் சேதுபதியை ஓரங்கட்டும் தயாரிப்பாளர்கள்

Vijay sethupathi latest news- கடந்த நான்கு வருடங்களாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை.

Update: 2022-12-31 07:34 GMT

விஜய் சேதுபதி.

Vijay sethupathi latest news- விஜய் சேதுபதி கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அங்கு நடிகர்களை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். இவர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றுள்ளார்.

பின்னர் பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல என்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். இயக்குநர் சுசீந்திரனே முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தன் கனவு மெய்ப்பட காரணமாக இருந்தார். சுசீந்திரன் இவரை தென்மேற்கு பருக்காற்று இயக்குநர் சீனு இராமசாமியிடம் அறிமுகப்படுத்தி, விஜய் சேதுபதிக்கு அப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தை வழங்கினார். இதனைத்தொடர்ந்து இயக்குனர், கதாநாயகன் என அவரது வெற்றி தொடர்ந்தது.

குடும்ப பார்வையாளர்கள் உட்பட அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி. இவரது படம் மிகவும் யதார்த்தமாகவும் குடும்பத்துடன் பார்க்கக்கூடியதாகவும் உள்ளது. ஆனால் அந்த காலம் எல்லாம் இப்போது முடிந்துவிட்டது. சமீபகாலமாக இவரது படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.

இதற்கு முக்கியக் காரணம், கடந்த நான்கு வருடங்களில் ஒரு படம் கூட இவரது நடிப்பில் வெற்றி பெறவில்லை. இந்த வருடம் வெளியான காத்து வொக்ல ரெண்டு காதல் படம் ரசிகர்களை ஓரளவிற்கு கவர்ந்தாலும், மாமனிதன் உள்ளிட்ட சில படங்கள் பெரிதாக கவரவில்லை.

producers sidelined vijay sethupathi

இதனால் அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. அதனால்தான் இப்போது அவர் ஹீரோவாக நடித்தால், பல தயாரிப்பாளர்களும் ஓடுகிறார்கள். ஹீரோவாக அவருக்கு வரவேற்பு இல்லை. ஆனால் அவர் வில்லனாக நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும் விஜய் சேதுபதியின் சந்தானம் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதற்கு முன், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து, புகழ் பெற்றார். உண்மையில், படத்தில் அவரது கதாபாத்திரம்தான் ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் அவரை இப்போது அதிக வில்லத்தனமான கதாபாத்திரங்கள் தேடி வருகின்றன.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் ஹீரோவாக நடித்தால், தயாரிப்பாளர்களை அதலபாதாளத்தில் தள்ளும் மோசமான தோல்விக்கு தள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். அந்த வகையில் தற்போது அவருக்கு வாய்ப்புகள் கணிசமாக குறைந்துள்ளது.

இதையெல்லாம் பார்த்த விஜய் சேதுபதி, இனிமேல் வில்லனாக நடிக்க முடிவு செய்துள்ளார். நம் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து இன்று ஹீரோவாகிய பல நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவிட்டு இன்று வில்லன் கேரக்டருக்கு தள்ளப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News