சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம்: லோகேஷ் கனகராஜ்
Today Tamil Cinema News in Tamil -சமூகவலைத்தளங்களில் நெல்சன் மீது நிகழ்த்தப்படும் விமர்சனங்களுக்கு லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.;
Today Tamil Cinema News in Tamil - 'ஓடுகிற குதிரை மீது பணத்தைக்கட்டு' என்பார்கள். பல்வேறு நிலைகளில் இதனை மேற்கோள்காட்டி கூறுவதுண்டு. அதிலும், திரைப்படத்துறையில் அடிக்கடி இப்படி உதரணமாக்கி சொல்வார்கள். ஒரு படம் வெற்றிபெற்றால் அதனைக் கொண்டாடும் அதே மனிதர்கள், தோல்வி அடைந்த படத்தையும் அதன் இயக்குநரையும் விமர்சிப்பதும் வெளுத்து வாங்குவதும் வேதனைக்குரிய செயல். மேலும், அந்தப்படம் சம்பந்தப்பட்டவர்கள் மீது குத்தப்படும் தோல்வி முத்திரை அவர்களின் அடுத்தகட்டத்தை கேள்விக்குறியாக்கிவிடுவதும் உண்டு.
குறிப்பாக, இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுவதுண்டு. தோல்வி என்றவுடன் அதற்கு முன்பு அவர்கள் கொடுத்த வெற்றிகள் பாராட்டத்தக்க அவர்களது திறமைகள் அத்தனையையும் ஒரு நொடியில் போட்டு உடைத்துவிடுவார்கள்.
நான்காண்டுகளுக்கு முன்பு கமலின் 'தசாவதாரம்', 'விஸ்வரூபம்' பார்ட் - 1, பார்ட்- 2 போன்ற படங்கள் வெற்றிபெறாத நிலையில் பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால், அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கமலின் 'விக்ரம்' இமாலய வெற்றி. இரணடாவது வாரம் தொடங்கிய நிலையிலும் தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன. கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படத்தில் நடித்த ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி மற்றும் மூன்றே நிமிடங்கள் திரையில் தோன்றும் சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு குவிகிறது.
ஆனால், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஏற்கெனவே, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்' என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்த நிலையில், அடுத்ததாக, நடிகர் விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படத்தை இயக்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்படம் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கிவிட்டது. 'டாக்டர்' வந்தபோது கொண்டாடிய நெல்சனை தற்போது 'விக்ரம்' கொடுத்த லோகேஷோடு ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்தநிநிலையில், நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, " நெல்சன் மிகவும் திறமையான இயக்குநர். அவருடன் நான் நிறைய நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அவருடைய படங்களுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன். அவ்வளவு திறமையான இயக்குநர் அவர். அவருடைய கடினமான இந்த வெற்றிப் பாதை பலருக்கும் முன்மாதிரி. அவர் தன்னுடைய படங்கள் மூலம் வரும் காலத்தில் நிச்சயம் நமக்கு மகிழ்ச்சியைத் தருவார். அதனால், இதுபோல அவரை கேலி செய்வதை தயவுசெய்து நிறுத்துங்கள்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜும், நெல்சனை இணையத்தில் கேலி செய்வதை குறிப்பிட்டு, "நெல்சன் குறித்த விமர்சனங்கள் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. என்னையும் இதுபோன்ற தோல்விகள் பாதிக்கும். சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம்" என ட்வீட் செய்துள்ளார்.
ஆனாலும், நெல்சன் இந்த விமர்சனங்களை எல்லாம் தூக்கிப்புறந்தள்ளிவிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கும் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2