A சான்றிதழ் அளிக்கப்பட்ட திரைப்படங்கள்-தணிக்கை குழு சுற்றறிக்கை

சென்சாரில் A சர்டிபிகேட் வழங்கப்பட்ட படங்களுக்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை திரையரங்குகள் அனுமதித்தால் கடும் நடவடிக்கை;

Update: 2022-04-03 11:45 GMT

சென்சாரில் A சர்டிபிகேட் வழங்கப்பட்ட படங்களுக்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை திரையரங்குகள் அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமுன்னு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்குது.


நம் நாட்டில் வெளியாகும் அனைத்து படங்களும் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படும். மொத்தம் மூன்று வகைகளில் தணிக்கை சான்றிதழ் அளிக்கப்படுகிறது. U, UA, A என 3 வகை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறது.

U சான்றிதழ் வழங்கப்பட்டால் படத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். U/A சான்றிதழ் வழங்கப்பட்டால் 18 வயதுக்குட்பட்டோர் பெரியவர்கள் அனுமதி மற்றும் துணையுடன் அந்தப் படங்களை பார்க்கலாம்.


அதுவே A சான்றிதழ் அளிக்கப்பட்டால் அதை 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க அனுமதி கிடையாது. படத்தில் வன்முறை காட்சிகள் மற்றும் ஆபாச காட்சிகள் அதிகம் இருந்தால் படத்திற்கு குழு A சான்றிதழ் வழங்கப்படும்.

ஆனால் தமிழக திரையரங்குகளில் இந்த விதியை பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருது.

இந்நிலையில் இந்த விதிகளை திரையரங்குகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தணிக்கை குழு திரையரங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்குதாமுல்ல,.

அதில் A சான்றிதழ் படங்களுக்கு 18 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் மீறினால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்குதாம்



 


Similar News