கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் அசத்தல் போட்டோ..
Srinidhi Shetty HD Images-நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கோப்ரா எனும் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.;
Srinidhi Shetty HD Images
Srinidhi Shetty HD Images-நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ( Srinidhi Shetty ) கே ஜி எஃப் எனும் படத்தின் மூலம் அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் ஆரம்ப காலங்களில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து பல சிக்கல்களில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்த ஒரு இளம் நடிகைகளில் ஒருவராவார்.
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இவர் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள மங்களூரில் பிறந்தார். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்தார்.
ஸ்ரீநிதி ஷெட்டி மாடலிங் துறையில் நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார் மிஸ் திவா சஸ்பெனல் 2016 மிஸ் கர்நாடகா 2015 போன்ற நிறைய மாடலிங் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
2018 ஆம் ஆண்டு கேஜிஎப் சாப்டர் ஒன் திரைப்படத்தில் நடிகர் யாஷ்-க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை;j தொடர்ந்து இவர் அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
பிறகு 2022 ஆம் ஆண்டு கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்திலும் நடித்திருந்ததால் இந்த இரண்டு படமும் அனைத்து இந்திய சினிமாவிலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு நிறைய விருதுகளையும் பெற்று தந்தது.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கோப்ரா எனும் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் வர ஆரம்பித்தன.
ஸ்ரீநிதி ஷெட்டி சமூக வலைகள் வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர். தற்சமயம் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு "நான் உங்களை முறைக்கின்றேன். ஆனால் நீங்கள் என்னை சிரிக்க வைக்கிறீர்கள்" என்று கேப்ஷன் கொடுத்து அவருடைய அழகான போட்டோக்களை பதிவிட்டுள்ளார். தற்சமையம் இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2