விரைவில் 'வேட்டையாடு விளையாடு-2'..!

நடிகர் கமல்ஹாசன் நடித்த 'வேட்டையாடுவிளயாடு' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கி, திரைக்கு வரவிருக்கிறது.

Update: 2022-09-04 11:59 GMT

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசனை நாயகனாகக் கொண்டு, 'வெந்து தணிந்தது காடு' எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை(02/09/2022) சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் மிக பிரமாண்டமாக நிகழ்ந்தேறியது.

இந்த விழா மேடையில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 'வேட்டையாடு விளையாடு-2' படத்திற்கான கதையைக் கேட்டு என் சம்மதத்தை இயக்குநர் கௌதமிடம் தெரிவித்துவிட்டேன். ஆனால், இடையில் கொரோனா வந்துவிட்டது. எனவே, முழுக்கதை என்னை வந்தடையவில்லை" என்றதும்,

விழா மேடையிலேயே இதற்கு விளக்கமளித்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், எழுத்தாளர் ஜெயமோகன், 'வேட்டையாடு விளையாடு-2' படதிற்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். அந்த முழுக்கதையும் எழுதி முடித்தவுடன் அது  விரைவில் கமல்ஹாசனைச் சென்றடையும்" என்ற உடனடி பதில் தகவலினைத் தெரிவித்தார்.

இதனிடையே, 'வேட்டையாடு விளையாடு- 2' படத்தின் முதற்கட்ட பணிகளில் இயக்குநர் கௌகதம் வாசுதேவ் மேனன் இருப்பதாகவும், அடுத்த வருடத்தில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News