அனுஷ்கா மார்க்கெட் இழந்ததற்கு அந்த நபர்தான் காரணம்! நெட்டிசன்கள் குமுறல்!

இப்போது மகாசிவராத்திரி தினத்தில் அவர் கோவிலில் பூஜையில் கலந்துகொண்ட வீடியோவில் அவரை பார்த்தவர்கள்தான் இப்படி பேசி வருகிறார்கள்.;

Update: 2023-10-07 06:15 GMT

நடிகை அனுஷ்காவுக்கு பட வாய்ப்பு குறைந்து மார்க்கெட் இழந்ததற்கு அவர்தான் காரணம் என ஒரு நபரை குற்றம் சாட்டி திட்டி தீர்க்கின்றனர் அனுஷ்கா ரசிகர்கள். ஒழுங்காக அழகாக நடித்துக் கொண்டிருந்தவர் இப்போது பட வாய்ப்புகளின்றி காணாமல் போனதற்கு காரணமே இவர்தான் என குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மிளிர்ந்தவர் அனுஷ்கா ஷெட்டி. ரஜினிகாந்த், விஜய், சூர்யா, அஜித், நாகர்ஜூன், மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர், பிரபாஸ் என முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து ரெண்டு இண்டஸ்ட்ரியையும் சேர்த்து கையில் வைத்திருந்தவர் அனுஷ்கா. இவரது நடிப்பிலும் அழகிலும் மயங்காத ஆளே கிடையாது எனலாம்.

அழகுக்கு அழகும் நடிப்புக்கு நடிப்பும் கொண்டு இரண்டு விதமான படங்களிலும் நடித்து வந்தார். பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாகவும், தானே தனித்து பல படங்களிலும் நடித்து புகழ் பெற்றார் அனுஷ்கா.

தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் அறிமுகமானவர் தமிழில் மாதவன் நடித்த ரெண்டு படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள மொபைலா மொபைலா பாடல் பயங்கர ஹிட் ஆகி தமிழகம் முழுக்க யாரடா இது என தேட ஆரம்பித்தனர். அப்படி ஒரு புகழை சில நாட்களிலேயே அடைந்தவருக்கு அடுத்தடுத்த நாள்களில் பிஸியாக கால்ஷீட் கேட்ட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் வீட்டு வாசலிலேயே போய் நின்றுவிட்டனர்.

பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக மட்டுமா தானும் களத்தில் இறங்கி பெர்பாமன்ஸ் செய்வேன் என அருந்ததி படத்தில் நடித்து அதை பல மொழிகளிலும் வெளியிட்டனர். படம் பக்காவான வரலாற்று ஆக்ஷன், கமெர்ஷியல், தெய்வீகம் நிறைந்த பேய் படமாக அமைந்தது.

அனுஷ்காவின் மார்க்கெட் வேற லெவலுக்கு உயர்ந்தது. அடுத்தும் வரலாற்று படங்களான ருத்ரமா தேவி, பாகுபலி உள்ளிட்ட படங்களில் துணிச்சலுடன் நடித்து இந்திய அளவில் மிகப் பிரபலமானார்.

அப்போதுதான் அவருக்கு இஞ்சி இடுப்பழகி வாய்ப்பு அமைந்தது. கண்டதையும் தின்று கொளுக் மொளுக் என்று ஆனார். குண்டாக இருக்கும் பெண்களின் பிரச்னைகளை பேச நினைத்த அனுஷ்காவுக்கே உடல் எடை அதிகரித்து பிரச்னையாகி போனது. இந்த படம் வெற்றி கூட பெறவில்லை என்பதுதான் சோகம்.

இப்போது ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் இயக்குநரை குற்றம் சாட்டுகின்றனர். இவர் மட்டும் அனுஷ்கா வாழ்வில் வராவிட்டால் நன்றாக இருந்திருக்கும். அனுஷ்கா இப்போது வரை முதலிடத்தில் இருந்திருப்பார்.

இப்போது மகாசிவராத்திரி தினத்தில் அவர் கோவிலில் பூஜையில் கலந்துகொண்ட வீடியோவில் அவரை பார்த்தவர்கள்தான் இப்படி பேசி வருகிறார்கள். 

Tags:    

Similar News