சிவகார்த்திகேயன், மகனுக்கு 'குகன் தாஸ்' என பெயரிட்டுள்ளார்-கொண்டாடும் ரசிகர்கள்
மகன் நெற்றியில் அன்பு முத்தமிடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், மகனுக்கு ’குகன் தாஸ்’ என்று பெயரிட்டுள்ளதை அறிவித்துள்ளார்.;
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் ஆர்த்தி. இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார். இதனை முன்னிட்டு பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டுவிட்டர் தளத்தில் #KuttySK என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
தனக்கு மகன் பிறந்திருப்பது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக... என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்" என்று பதிவு செய்து இருந்தார்..
கடந்த ஜூலை 12-ஆம் தேதி சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில் "18 வருடங்களுக்குப் பிறகு என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந் நிலையில், மகன் நெற்றியில் அன்பு முத்தமிடும் புகைப்படத்தை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், மகனுக்கு 'குகன் தாஸ்' என்று பெயரிட்டுள்ளதை அறிவிச்சிருப்பதை கொண்டாடி வாரய்ங்க ரசிகர்கள்