கோலிவுட்டைத் தொடர்ந்து டோலிவூட்டிலும் வாகை சூட திட்டமிடும் சிவகார்த்திகேயன்..!
Actor Sivakarthikeyan -நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கிலும் குறிப்பிட்ட ரசிகர்களைப் பெற்றுள்ளதால், அங்கேயும் தடம் பதிக்கிறார்.;
Actor Sivakarthikeyan -தீபாவளித் திருநாளில் வெள்ளித் திரையில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்த 'சர்தார்' திரைப் படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வெளியான 'பிரின்ஸ்' திரைப்படத்தையும் தமித் திரை ரசிகர்கள் மட்டுமின்ற திரைப்பட வணிகர்களும் கோலிவுட்டின் முன்னணி பிரமுகர்களும் இந்த இரு திரைப்படங்களின் ரிசல்ட்டை மிகவும் எதிர்பார்த்தனர்.
ஆனால், எதிர்பார்த்த அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்காமல் நடிகர் கார்த்தியின் 'சர்தார்' வெற்றிப்பட வரிசையில் இடம்பெற்று முந்திச் செல்லும் முதல் குதிரையின் வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், நடிகர் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படம் எல்லோரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. 'பிரின்ஸ்' திரைப் படத்தின் மூலம் தெலுங்கு மார்க்கெட்டைப் பிடிக்க நினைத்த சிவகார்த்திகேயனுக்கு அந்தப் படம் பெரிய ஏமாற்றத்தை தந்தது என்பது அவரே எதிர்பார்க்காத ஒன்று என்கிறார்கள் சிவகார்த்திகேயனின் தரப்பினர். இந்தநிலையில், எப்படியாவது டோலிவுட் மார்க்கெட்டை பிடிக்க நினைக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், அவரது அடுத்த படத்தில் 'புஷ்பா' திரைப் படத்தின் வில்லன் நடிகரை இணைத்துள்ளார்.
இதனிடையே, இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்றும் அதனால், 'மாவீரன்' படப்பிடிப்பே நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அது வெறும் வதந்தி என நிரூபிக்கும் விதமாக மீண்டும் 'மாவீரன்' திரைப் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் படுவேகமாக செல்வதை அறிவிக்க ஆன்போர்ட் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
எனவே, நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக படப்பிடிப்பே நிறுத்தப்பட்டதாகவும் வெளியாகிய பரபரப்பு தகவல்கள் அத்தனையும் நிஜமில்லை என்றாகியது. மழை காரணமாகவே, 'மாவீரன்' படப்பிடிப்பு ஒரு வாரம் நிறுத்தப்பட்டதாகவும், இந்த வாரத்தில் இருந்து மீண்டும் தொடங்கும் எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது இருவருக்கும் இடையே எந்தவொரு மோதலும் இல்லை என்பதும் தெளிவாகி உள்ளது.
நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்த 'மண்டேலா' படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர், இயக்கிநர் மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் 'மாவீரன்' திரைப் படம் உருவாகி வருகிறது. சில வாரங்களாக நிறுத்தப்பட்டு இருந்த 'மாவீரன்' படப்பிடிப்பு இந்த வாரம் முதல் மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டிலும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்த நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். அதனால், தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், திரைக்கதை காரணமாக தோல்வியடைந்தது. ஆனாலும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டோலிவுட்டில் நல்ல மார்க்கெட் உருவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில், தெலுங்கு ரசிகர்களை மேலும், கவரும் விதமாக, 'மாவீரன்' படத்தில் பிரபல தெலுங்கு காமெடி நடிகரும், 'புஷ்பா' படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் சுனில் தற்போது, 'மாவீரன்' படத்தில் இணைந்துள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாந்தி டாக்கீஸ் வெளியிட்டு அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நடிகர் கார்த்தியின் அடுத்த திரைப் படமான 'ஜப்பான்' திரைப் படத்திலும் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்தநிலையில்தான், நடிகர் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' திரைப் படத்திலும் அவர் இணைந்துள்ளார். நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இடையே நடைபெற்ற தீபாவளி கிளாஷில் 'சர்தார்' திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2