தனுஷை வாரிய சிவகார்த்திகேயன்..! என்ன இப்படி சொல்லிட்டாரு..!

தனுஷை வாரிய சிவகார்த்திகேயன்..! என்ன இப்படி சொல்லிட்டாரு..!;

Update: 2024-08-13 11:30 GMT

சிவாகார்த்திகேயன் தயாரித்துள்ள கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய விசயம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் தனது தடத்தை பதித்து வருகிறார். தற்போது அவர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி வருகிறது. அந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், தான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்லமாட்டேன் என்று கூறி அதிர வைத்தார்.

யாரையும் கண்டுபிடிச்சி, நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அப்படி சொல்லி சொல்லி பழகிட்டாங்க. நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் னு சொல்றமாதிரி ஆள் நான் இல்லை. இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

இதில் மூன்று விசயம் அடங்கியுள்ளது. ஒன்று விஜய் தொலைக்காட்சி தங்களுடைய புராடக்ட் என சொல்வதால் அதை தாக்கியிருக்கிறார் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் பலரும் இது தனுஷை சொன்னதுதான் என அடித்து சொல்கிறார்கள். காரணம் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையேயுள்ள பிரச்னை ஊரறிந்ததே.

ஆனால் சிவகார்த்திகேயன் ரசிகர்களோ இது சாதாரணமாக அவர் சொன்னதுதான் என மழுப்புகின்றனர். 

Tags:    

Similar News